தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் வெட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது குறித்து, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இது போன்ற நேரத்தில் நேரத்தில் தான் மின் தடை ஏற்படுவதாக தெரிவித்திருந்தார், அமைச்சர் கூறிய இந்த காரணம் சமூக வலைதளத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது,
இதனை தொடர்ந்து இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி அதில், கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை – அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன – என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன்.
அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்! பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள்.
எந்தச் சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம் என தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு விளக்கம் கொடுத்திருந்தார்.
இது குறித்து நடிகை கஸ்துரி தனது சமூக வலைதளத்தில் நக்கல் செய்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில். Strictly satire- Just for humour. Dravidian Stock take a chill pill ! செல்லூர் ராஜு வின் விஞ்ஞான அறிவுக்கு விசிறியாக இருந்தவரெல்லாம் இப்போ செந்தில் பாலாஜிக்கு மாறிவிட்டார். கள்ளிக்கு பிள்ளை சாக்கு, கறண்ட் கம்பிக்கு அணில் பிள்ளை சாக்கு ! அது என்ன அணிலா அணில் கும்ப்ளே வா ஸ்டம்ப்பை தூக்குற மாதிரி கரண்ட் கம்பியை தாக்குறதுக்கு !
அணில் என்ன ராம்குமாரா கரண்ட் கம்பியை கடிக்கறதுக்கு ? அணில் என்ன அவாளா ? அநியாயமா பழிபோடறதுக்கு? கருப்புச்சட்டை காக்காவை விட்டுட்டு ராமருக்கு உதவிய அணிலை டார்கெட் பண்ணுறாங்க , எவ்வளோ பெரிய (யார்) அரசியல் பாருங்க ! என அமைச்சரின் அணில் தொடர்பான கருத்துக்கு கிண்டல் செய்து கவிதையை வெளியிட்டுள்ளார் நடிகை கஸ்துரி.