தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு முன்பு கர்நாடகாவில் IPS அதிகாரியாக இருந்த போது, நான் தமிழகத்தில் இருந்து வந்திருந்தாலும் கன்னடியனாக பெருமை படுகிறேன் என்று பேசியிருந்தார். இது ஒரு அரசு உயர் அதிகாரி அடுத்த மாநிலத்தில் பணிபுரியும் போது அந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது இயல்பு அதன் வெளிப்பாடு தான் இது போன்ற பேச்சு சமீபத்தில் தமிழக டிஜிபி யாக இருந்த திரிபாதி தமிழகம் என் தாய் வீடு என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை கன்னட மொழியில் பேசிய பழைய வீடியோவை, காவேரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக இருப்பேன் என அண்ணாமலை பேசியதாக, பொய்யான தகவலை சில விஷமிகள் திட்டமிட்டு பரப்பி வந்துள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து, சமீபத்தில் பாஜக தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவர், நீங்க கர்நாடகாவில் IPS அதிகாரியாக இருந்த போது காவேரி பிரச்சனைக்காக கர்நாடகாவுக்காக குரல் கொடுப்பேன் என்று நீங்கள் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறித்து கேள்வி எழுப்ப பட்ட போது பதிலளித்த அண்ணாமலை,
எங்க அந்த வீடியோவை போட்டு காட்டுங்க, திமுக ஐடி பிரிவு சித்தரிச்சு எதை வெளியிட்டாலும் நீங்க நம்பி விடுவீர்களா. எங்கே நான் காவேரி பிரச்சனையை பற்றி பேசுனேன், நான் கர்நாடக மொழியில் பேசிய வீடியோவை திமுக ஐடி பிரிவு தவறாக தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டால் அதை நீங்க நம்பி விடுவீர்களா.அது என்னுடைய குரலே கிடையாது , அந்த விடீயோவை போட்டு காட்டுங்க என தெரிவித்த அண்ணாமலை, முதலில் இது போன்ற சிந்தனையில் இருந்து வெளியில் வாங்க என கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில் அண்ணாமலையின் இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின் சமூக வலைதளத்தில் வைரலாக சர்ச்சைக்குரிய அண்ணாமலை குறித்த அந்த வீடியோ பொய்யானவை என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திமுக ஐடி பிரிவு மாநில துணைச் செயலாளர் இசை என்பவர், அண்ணாமலை பேசிய proud Kannadiga என்று பேசிய வீடியோவை பதிவு செய்து, இதோ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்ட ஆதாரம் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
கரகாட்ட காரன் படத்தில் வரும் வாழைப்பழம் காமெடி காட்சி போன்று, நான் காவேரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவாக இருப்பேன் என்று பேசிய வீடியோ ஆதாரம் எங்கே என அண்ணாமலை கேட்டதற்கு இதோ அது தான் இது என்று தவறான வீடியோவை திமுக ஐடி பிரிவு நிர்வாகி பதிவு செய்துள்ளது கேலி பொருளாக அமைத்துள்ளது குறிப்பிடதக்கது.