தாமிரபரணி மாவட்டம் மாஞ்சோலையில் 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி, அப்போதைய திமுக ஆட்சியில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் சென்ற போது காவல் துறை நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இருந்து தப்புவதற்காக தாமிரபரணி ஆற்றில் குதித்ததிலும் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அப்போதைய திமுக ஆட்சியின் தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி, போலீஸ் தற்காப்புக்காகவே தடியடியில் ஈடுபட்டதாக கூறினார். இந்நிலையில் இந்த கோர சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்று 22வது ஆண்டு தூக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது, அரசியல் கட்சி தலைவர் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று அங்கே பரிதாபமாக ஆற்றில் மூழ்கி இறந்தவர்களுக்கு மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாஞ்சோலை சம்பவத்தை நினைவு கூறும் வகையில் இன்று நண்பகல் விடுதலை சிறுத்தை காட்சி சார்பில் தாமிரபரணி நதியில் மலர் வளையம் வைத்தும் உதிரிப்பூக்கள் தூவியும் மாஞ்சோலை உரிமைப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் இதுகுறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது டிவீட்டர் பக்கத்தில்,ஜூலை23: மாஞ்சோலை போராளிகள் வீரவணக்கநாள். மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள்மீது காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கியதில் 17பேர் பலியாயினர். தாமிரபரணி ஜீவநதி அன்று பிணங்களைச் சுமந்த சவநதியானது. 22ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அரசப்பயங்கர வாதம் ஒழிப்போம் என தெரிவித்துள்ளார்.
இதில் அரசப்பயங்கர வாதம் ஒழிப்போம் என மாஞ்சோலை சம்பவம் நடைபெற்ற போது ஆட்சியில் இருந்த திமுகவை மறைமுகமாக திருமாவளவன் சட்டியுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி எதிர்க்க துணித்து விட்டாரா திருமா.? என கேள்வி எழுந்துள்ள நிலையில், இது தோழமை சுட்டுதலாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்படத்தக்கது.