சார்பட்டா படம் தமிழ் பிளாஸ்டர்ஸ் என்ற இணையதளத்தில் லீக்…! படக்குழுவினர் அதிர்ச்சி.!

0
Follow on Google News

நடிகர் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நேற்று (22.07.2021) அமேசான் பிரைமில் வெளிவந்தது. வெளியான சில நொடிகளில் சார்பட்ட திரைப்படம் அதற்குள் தமிழ் பிளாஸ்டர்ஸ்-யில் கசிந்தது. நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நீலம் புரோடக்சன்ஸ், K9 ஸ்டுடியோஸ் தயாரித்த திரைப்படம் சார்பட்டா. இந்த படத்தில் பசுபதி, கலையரசன், சந்தோஷ் பிரதாப், சுப்பிரமணி, அனுபமா, ஜான் விஜய் போன்ற பலர் நடித்துள்ளனர்.

வட சென்னையில் வசித்து வரும் இரு பாக்சிங் பரம்பரைக்குள் நடைபெறும் யுத்தம் தான் சார்பட்டா படத்தின் கதை. இந்தத் படத்தின் ட்ரெய்லரை ஜூலை 13-ம் தேதி நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சார்பட்டா படம் அமேசான் ப்ரைம் ஓடிடி-தளத் தளத்தில் ஜீலை 23ல் (நேற்று) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவித்தனர். ஆனால் அமேசான் பிரைம்-யில் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வந்தது.

இந்த வெளியாகி சில நொடிகளில் இந்த படத்தை தமிழ் பிளாஸ்டர்ஸில் வெளியானது. சார்பட்டா அமேசான் ஓடிடி-யில் வெளியான இந்த படத்தை அமேசானில் பிரீமியம் பணம் கட்டி உபயோகித்து வருபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம் ஆனால் தமிழ் பிளாஸ்டர்ஸில் லீக் ஆகி இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.