விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்கிற தலைப்பில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் திமுக சார்பில் நடந்து வருகிறது, இதில் திமுக எம்பி கனிமொழி இரண்டு நாள் மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், மதுரை சிம்மக்கல் பகுதியில் மறைந்த முன்னால் திமுக தலைவர் கருணாநிதி சிலை அமைக்கும் இடத்தை பார்வையிட வந்த கனிமொழிக்கு திமுகவினர் அன்பளிப்பாக வேல் கொடுக்க முயன்ற போது, அட சீ இது என்ன என்று தள்ளிவிட்டது தமிழக இந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக இந்துக்கள் வழிபடும் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள் இழிவு செய்த பின்பு தமிழக இந்துக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக,இந்து திருமண நிகழ்வில் கூறும் மந்திரங்கள் கேவலமானவை என பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், எனக்கும் எனது மனைவிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், இந்து கோவிகளில் அசிங்கமான சிற்பங்கள் இருக்கும் என பேசிய திருமாவளவன் போன்றோர் கூட கையில் வேல் ஏந்தி பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பகுத்தறிவு, நாத்திகம் பேசிவந்த திமுக தலைவர் உட்பட தமிழக இந்துக்களில் எழுச்சியின் காரணமாக கொள்கையை ஓரம் கட்டி கையில் வேலுடன் கட்சி தரும் நிலையில், கனிமொழிக்கு அன்பளிப்பாக கொடுக்க வந்த வேலை தள்ளிவிட்ட சம்பவம் அவர் பெரியார் கொள்கையில் இன்னும் பிடிப்புடன் இருப்பதாக காட்டுகிறது என நாத்திகவாதிகள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனிமொழிக்கு விநாயகர் சிலை அன்பளிப்பாக கொடுக்க முயன்ற போது அதை வாங்க மறுத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வேல் கொடுக்க வந்த திமுகவினரை பார்த்து கோபத்துடன் அட சீ என்று தள்ளிவிட்ட சம்பவம் தமிழ் கடவுள் முருகனை வழிபட கூடிய தமிழக இந்துக்கள் மனம் புண்படும்படி அமைந்துள்ளது.
மேலும் வேல் வாங்க மறுத்து கனிமொழி தள்ளிவிட்ட போது, அங்கே இருந்த திமுகவினர் தலைவர் மற்றும் இளைஞரணி செயலாளர் கூட அன்பளிப்பாக வேல் கொடுத்த போது ஏற்று கொண்டுள்ளார்கள் என தெரிவித்தபோது, மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நான் என் கொள்கையில் உறுதியாக இருக்கிறேன், என்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என கனிமொழி தெரிவித்ததாக கூறப்படுகிறது, இறுதி வரை அன்பளிப்பாக வேல் கொடுத்ததை அவர் ஏற்று கொள்ளவில்லை.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .