திமுகவை தோற்கடிக்க அதிமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ, தமிழன் பிரசன்னா.! பாஜக போட்ட பக்கா பிளான்.!

0
Follow on Google News

திமுக கூட்டணியை தோற்கடிக்க அதிமுக கூட்டணி வெற்றி பெற வைகோ மற்றும் திமுக பேச்சாளர் பிரசன்னா ஆகியோரை பாஜக பயன்படுத்த திட்டம்மிட்டுள்ளது, பாஜக தேர்தல் பிரச்சார வியூகங்கள் பற்றிய ஆலோசனை கூட்டம் சமீபத்தில் பிரதமர் மோடி கோவை வந்த பிறகு கோவையில் உள்ள ஒரு நடச்சத்திர விடுதியில் நடைபெற்றது, பாஜகவில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தேர்தல் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதில் பாஜக மாநில முக்கிய தலைவர்கள் சிலர் கலந்து கொண்டனர், பாஜக ஐடி பிரிவு முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் ஆலோசனை கூட்டம் முடிவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது, அதில் ஐடி பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் மூன்று குழுவாக பிரிந்து வரும் சட்டசபை தேர்தலில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதில் யார் யார் எந்த பிரிவில் பணியாற்ற வேண்டும் என்பதை ஐடி பிரிவு தலைமை மார்ச் 1ம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டும்.

மூன்று குழுவாக பிரிக்கப்பட்டுள்ள பாஜக ஐடி பிரிவில், முதல் குழு பாஜக மற்றும் அதிமுக சாதனைகளை மக்களுக்கு எளிய முறையில் எடுத்து சொல்லும் விதத்தில் செயல்பட வேண்டும், மேலும் அதிமுக கூட்டணியில் இடப்பெற்றுள்ள அதிமுக மற்றும் கூட்டணி காட்சிகள் பிரச்சாரங்களை சமூக வலைதளத்தில் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும், சமூக வலைத்தளத்தை அதிமுக கூட்டணி கட்சிகளின் பிரச்சாரம் ஆக்கிரமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அடுத்ததாக இரண்டாவது குழு, திமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள், திமுக வேட்பாளர் குறித்து தவறான பிண்ணனி இருக்கிறதா என ஆராய்ந்து அதை வெளியில் கொண்டுவருவது, குறிப்பாக திமுக ஆட்சி காலத்தில் அந்த கட்சி நிர்வாகிகளால் நில அபகரிப்புக்கு உள்ளான மக்களை சந்தித்து அவர்கள் சந்தித்த இன்னல்களை வீடியோ எடுத்து வெளியிடுவது, திமுக தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் பொது உளறினால் அதை ட்ரெண்ட் செய்வது போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக மூன்றாவது குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலைகள் வித்தியாசமானது, அதாவது சிலர் பேச்சுக்கள் மட்டும் அந்த கட்சிக்கு சரிவையும் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்றத்தை கொடுக்கும், அந்த வகையில் வைகோ இதற்கு முன்பு திமுக தலைவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது, திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் இந்துக்கள் மனம் புண்படும்படி பேசியது, அதே போன்று திராவிட கழக தலைவர் வீரமணி ,திமுக தலைவர் முக ஸ்டாலின் , திமுக எம்பி கனிமொழி ஆகியோர் இந்துக்களுக்கு எதிராகவும், இந்து கடவுள்களை இழிவாகவும் பேசிய பழைய வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் வைரல் செய்து, அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் இவர்களின் பழைய பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களை பயன்படுத்த பாஜக பக்க பிளான் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .