முன்றாவது அணியில் TTV தினகரன்.! அதிமுகவுக்கு ஆதரவாக சசிகலா.! வெடித்தது சசிகலா -TTV தினகரன் இடையே சண்டை.!

0
Follow on Google News

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசியதற்கு பின்பு வரும் சட்டசபை தேர்தலில் மூன்று முனை போட்டி என உறுதி செய்யபப்ட்டுள்ளது, மேலும் இந்த கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் வர இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த மூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளராக நடிகர் கமல்ஹாசன் முன்னிறுத்த பட இருக்கிறார்.

இந்நிலையில் அதிமுக, திமுக என இரு கூட்டணியில் ஏதவாது ஒரு கூட்டணியில் இடம்பெற்று விடலாம் என முயன்ற நடிகர் சரத்குமாரை இரண்டு கட்சிகளுக்கும் கண்டு கொள்ளாத நிலையில், சமீபத்தில் TTV தினகரனை சந்தித்து பேசியதற்கு பின்பு TTV தினகரனை முன்னிறுத்தி மூன்றாவது அணி அமைக்கும் முடிவுக்கு வந்துள்ளனர், இதனை தொடர்ந்து சசிகலாவை நேரில் சந்தித்து இது குறித்து நீங்க பேசினால் தான் சரியாக இருக்கும் என்று சரத்குமாரை மூன்றாவது அணி குறித்து பேச வலியுறுத்தியுள்ளார் TTV தினகரன், அதற்கான ஏற்பாட்டை சமீபத்தில் ஜெயலலிதா பிறந்த தினம் அன்று TTV தினகரன் ஏற்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜெயலலிதா பிறந்த தினம் அன்று சசிகலாவை சந்தித்த சரத்குமார், முன்றாவது அணி குறித்து பேச அதற்கு சசிகலா துளியளவும் சம்மதிக்க வில்லை என கூறப்படுகிறது, மேலும் TTV தினகரன் தொடங்கிய அமமுக கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஜெயலலிதா கட்டி காத்த அதிமுக தோல்விக்கு நான் காரணமாக இருக்க மாட்டேன், அதிமுக தலைமை பதவிக்கு வருவதற்கு தனக்கு ஆசை இருந்தது ஆனால் அதிமுகவை அழிக்க வேண்டும் என எனக்கு துளியளவும் விருப்பம் இல்லை என சசிகலா கூறியுள்ளார், இந்த சந்திப்பின் போது TTV தினகரனும் இருந்துள்ளார்.

TTV தினகரன் தூண்டுதலின் பேரில் தான் சரத்குமார் தன்னிடம் இவ்வாறு பேசுவதை முன் கூட்டியே சசிகலாவுக்கு தெரித்துள்ளதாக கூறப்படுகிறது, இதன் பின்பு ஜெயலலிதா பிறந்த தினத்தன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா பேசுகையில், அம்மா அவர்கள் கூறியது போன்று கழகம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என தெரிவித்தது, அவர் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் TTV தினகரன் இனி வேலைக்கு ஆக மாட்டர் என முடிவு செய்த சரத்குமார் இன்று காலை கமல்ஹாசனை சந்தித்து மூன்றாவது அணி அமைக்கும் வேளையில் இறங்கியுள்ளார், இதனை தொடர்ந்து TTV தினகரனுக்கு மூன்றாவது அணியில் இடம் பெற அழைப்பு விடுத்துள்ளார் கமல்ஹாசன், ஆனால் சசிகலா அதிமுகவுக்கு எதிராக எந்த ஒரு முடிவும் எடுக்க போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் மேலும் TTV தினகரன் தலமையில் உள்ள அமமுக கட்சியை பற்றி சிறையில் இருந்து வந்ததில் இருந்து கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மூன்றாவது அணியில் அல்லது சுயேட்சையாக TTV தினகரன் வரும் தேர்தலில் போட்டியிட்டால் அதில் தனது பெயரை பயன்படுத்த கூடாது என சசிகலா தினகரனிடம் தெரிவித்துள்ளார், மேலும் தேர்தல் நெருக்கும் நேரத்தில் சசிகலா ஆதரவு அதிமுகவுக்கு தேவைபட்டால் நாம் அனைவரும் ஒன்றிணைத்து அம்மா அவர்கள் கட்டி காத்த நமது இயக்கத்தை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றும் நமது பிராதன எதிரியான திமுகவை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும்