டெல்லியில் TR பாலு, திருமா விரட்டியடிப்பு…. நடந்த உச்சக்கட்ட அவமானம் உங்களுக்கு தெரியுமா.?

0
Follow on Google News

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடபட்டது. இதனிடையே TR பாலு தலைமையில் திமுக,அதிமுக,திருமாவளவன், கம்யூனிஸ்ட் எம்பிக்கள் என அணைத்து கட்சி எம்பிக்கள் குடியரசு தலைவரிடம் மனு அளிக்க முயன்றனர். ஆனால் கொரோனா புரோட்டோகாலை காரணம் காட்டி அவரை சந்தித்து மனு அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் குடியரசு மாளிகை வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர் TR பாலு தலைமையிலான எம்பிக்கள். ஆனால் கொரோனா புரோட்டோகாலை காரணம் காட்டி இவர்கள் குடியரசு மாளிகையில் இருந்து விரட்டப்பட்டாலும். அன்று மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி மற்றும் அவருடன் வந்த அதிகாரிகளை குடியரசு தலைவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. குடியரசு மாளிகையில் இருந்து விரட்டப்பட்ட TR பாலு தலைமையிலான எம்பி குழு உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்றது.

இதனால் அவரது செயலாளரிடம் மனுவை தமிழக எம்பிக்கள் கொடுத்துவிட்டு திரும்பினர். ஆனால் இந்த சந்திப்புக்காக ஏற்கனவே சந்திக்க நேரம் கேட்டு பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் TR பாலு தலைமையிலான எம்பிக்கள் கூட்டாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அமைச்சர் அமித்ஷா அலுவலகத்தில் இல்லை. அவர் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டதாக இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கேயே 2 மணி நேரம் காத்திருந்துவிட்டு அமித்ஷா வராததால் TR பாலு தலைமையிலான எம்பிக்கள் டெல்லியில் உள்ள TR பாலு இல்லத்துக்கு திரும்பினார். பின்னர் அமித்ஷா, அலுவலகத்திற்கு வந்துள்ளதை அறிந்து கொண்டு அவரை சந்திக்க மீண்டும் TR பாலு இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர் TR பாலு தலைமையிலான எம்பிக்கள். ஆனால் அமித்ஷா அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

TR பாலு தலைமையிலான எம்பிக்கள் மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திக்க சென்ற போது அங்கிருந்த பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவர்களை உள்ளே விட மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து டிஆர் பாலு, அமைச்சர் அமித்ஷாவுக்கு தொலைபேசியில் பேசியும் அவர் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்களை சந்திக்காததில் அரசியல் எதுவும் இல்லை என டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

மேலும், உள்துறை அமைச்சருக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கும். நானும் அமைச்சராக இருந்தவன்தான். நிமிடத்திற்கு நிமிடம் அலுவல்கள் மாறும். இதில் அரசியல் ரீதியாக எதுவும் இல்லை என அமித்ஷா சந்திக்க மறுத்தாலும் அவரை விட்டுகுடுக்காமல் TR பாலு பேசியுள்ளது மத்திய பாஜகவிடம் திமுக அடி பணிந்து செல்வதாக அரசியல் விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.