இது கேனத்தனமான பேச்சு.. கம்யூனிஸ்ட் அருணனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

0
Follow on Google News

இன்னும் 8 மாதங்களில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என கடந்த ஜூன் மாதம் எதிர்கட்சி தலைவராக இருந் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அதே போன்று மதுரையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வைக் கொண்டு வர முடியவில்லை.

அவரது மறைவுக்குப் பிறகு நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவி அனிதா உட்பட 14 பேர் நீட் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கட்டாயம் ரத்து செய்வோம் என உதயநிதி பிரச்சாரம் செய்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போது திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், இதுவரை தேர்தலில் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வை ரத்து செய்வோம் என இதுவரை குரல் கொடுத்து வந்த திமுக அமைச்சர்கள், தற்போது மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்கிறார்கள்.

மாணவர்கள் குறைந்த நேரத்தில் எவ்வாறு நீட் தேர்வுக்குத் தயாராக முடியும்? வேண்டுமென்றே திட்டமிட்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து, பெற்றோர்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற எங்கள் கேள்விக்கு, இதுவரை திமுகவிடம் இருந்து பதில் இல்லை நீட் ரத்து ஆகுமாஆகாதா என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன், “நீட் ரத்து ஆகுமாஆகாதா என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என எடப்பாடி தெரிவித்துள்ளதை சுட்டி காட்டி, மாேடியை சந்திச்சீங்களே, அவரிடம் கேட்டிருக்க வேண்டும். நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் அவரிடம் இருப்பது மறந்து பாேனதா? என அருணன் பதிவு செய்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதில், நீட் ரத்து செய்யப்படும்ன்னு சொன்னது ஸ்டாலினா மோடியா? சொன்னவங்க கிட்ட கேட்காம, வேற யாருகிட்ட கேப்பாங்களாம். என்றும், மேலும் இது கேனத்தனமா வாதம், நாங்க ஆட்சிக்கு வந்தா முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்வது என்று கூறிய திமுக, அதற்கு பதில் சொல்லட்டும் அதை விடுத்து அதிகாரம் மோடி கையில் என்பது முன்பு தெரியாதோ.! இது கேனத்தனமான பேச்சு என நெட்டிசன்கள் அருணனை வறுத்தெடுத்து வருகின்றனர்.