திமுக தலைவர் முக ஸ்டலின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர் குறித்து எழுப்பிய கேள்விக்கு, அவர் பேசியதாவது, எம்.ஜி.ஆர். பாடல்கள் நிறைய பாடுவேன். அச்சம் என்பது மடமையடா. விவசாயி பாட்டு ரொம்ப பிடிக்கும். எம்.ஜி.ஆர். படங்களை எல்லாம் நாலு தடவை, ஐந்து தடவை பார்ப்பேன். எம்.ஜி.ஆருடைய படம் ரிலீஸ் ஆனது என்றால் முதல் நாள், முதல் ஷோ, முதல் டிக்கெட் நான்தான் வாங்குவேன். அதை முண்டியடித்துக்கொண்டு போய் வாங்குவது தியேட்டரில் இன்னும் ஞாபகம் இருக்கிறது.
பாரகன் தியேட்டரில் போய் ‘பறக்கும் பாவை’ படம் ரிலீஸ் மார்னிங் ஷோ போய் நிற்கிறோம். டிக்கெட் வாங்குவதற்காக, முடியவில்லை. மேட்னி ஷோ நிற்கிறேன், முடியவில்லை. ஈவினிங் ஷோ நிற்கிறேன் முடியலை. நைட் ஷோ தான் டிக்கெட் வாங்கி படம் பார்த்து வந்தேன். அவர் முதலில் போன் எனக்கு பண்ணுவார். கோபாலபுரத்தில் இருக்கும் போது போன் வரும். அப்போது செல்போன் எல்லாம் கிடையாது அல்லவா? லேண்ட் லைனில்தான் போன் வரும். எம்.ஜி.ஆர். பேசுகிறேன் என்று சொல்வார்கள். அவர் எனக்கு போன் பண்ணுவார். படம் பார்த்தியா, எப்படி இருக்கு? என்று என்னிடம் கேட்பார். நான் அவரிடம் படத்தை பத்தி சொல்லுவேன்.
அதேபோல நான் ஸ்கூல் படிக்கும்போது சின்ன வயசுல அங்க வந்து டிராமா நடத்த நிதி கலெக்ட் பண்ணுவோம். அப்போது நானும், எனது நண்பர்களும் போய் நிதி வாங்குவோம். எம்.ஜி.ஆரிடம் வாங்கியிருக்கிறேன், எஸ்.எஸ்.ஆரிடம் வாங்கியிருக்கிறேன், சிவாஜியிடம் வாங்கியிருக்கிறேன். அப்போது 250 ரூபாய், 350 ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு கலை நிகழ்ச்சி நடத்துவோம். அதுக்கெல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறோம்.
சில சமயங்களில் சூட்டிங் பாயிண்டுக்கே போய்விடுவோம். அப்போது பத்மநாபன் என்ற எம்.ஜி.ஆரின் மேனேஜர் இருந்தார். அவர்தான் எங்களை அழைத்துக்கொண்டு போய் பார்க்க வைப்பார். மேக்கப்பில் இருக்கும் போதே, அவரும் பணம் கொடுப்பார். ஒரு முறை வீட்டுக்கு போன் செய்து நாடோடி மன்னன் படத்திற்கு அவருடைய அனுமதியில்லாமல், பத்மநாபன் அனுமதி கொடுத்து விட்டார். ராம் தியேட்டரில் போட்டுவிட்டோம். ஏ.கோவிந்தசாமி இறந்து அவர் குடும்பத்திற்கு குடும்ப நிதி வசூல் செய்துகொண்டு இருக்கிறோம்.
அப்போது நாடோடி மன்னன் சினிமா போட்டு அதிலிருந்து நிதி திரட்டுகிறோம். அவர் எனக்கு போன் செய்கிறார். யாரைக்கேட்டு படத்தை ரிலீஸ் செய்தாய் என்று கேட்டார். அதற்கு நான் உங்கள் உதவியாளர் பத்மநாபன்தான் கொடுத்தார் என்று சொன்னேன். என்னை கண்ணா பிண்ணா என்று சத்தம் போட்டார். இதுதான் லாஸ்ட் வானிங், இனிமேல் இதுபோல் பண்ணக்கூடாது என்று சொன்னார். அப்போது நான் சார் போட்டு பேசிவிட்டேன். இல்ல சார் இல்ல சார் என்று சொல்லிவிட்டேன். அடுத்த நாள் தலைவர் வீட்டுக்கு வருகிறார். தலைவரிடத்தில் கம்பளைண்ட் பண்ணுகிறார். உங்கள் பையன் என்ன சார் போட்டு கூப்பிடுகிறார் என்று சொன்னார். அப்போது எனக்குத் தெரிகிறது. சார் போட்டு பேசுவது மரியாதை கொஞ்சம் கம்மி என்று. அதற்குப் பிறகு பெரியப்பா, பெரியப்பா என்றுதான் கூப்பிடுவேன். ஏனென்றால், என்னை பெரியப்பா என்றுதான் கூப்பிட சொல்லுவார்.