அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு உறுதி செய்யப்பட்ட இந்த 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவர்கள் தான்.!

0
Follow on Google News

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது, தேர்தல் தேதி அறிவித்த அடுத்த நாள் காலை பாஜக தரப்பில் இருந்து முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள், ஆனால் அன்றே எந்தந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஆனது.

இதனை தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு சென்னையில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், அதில் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில் பாஜக தரப்பில் 30 சீட் வரை கேட்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது, இறுதியில் சில முக்கிய முடிவுகள் மட்டும் எடுக்கப்பட்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தமிழக பாஜக தலைவர்களுடன் பேசி தொகுதிகளை உறுதி செய்ய வலியுறுத்தி டெல்லி புறப்பட்டார் அமித்ஷா.

இந்நிலையில் மீண்டும் நாளை அமித்ஷா தமிழகம் வர இருப்பதால் அதற்குள் எத்தனை தொகுதிகள், எந்தத்த தொகுதிகள் என்பதை உறுதி செய்ய அமித்ஷா தமிழக பாஜக தலைமையிடம் வலியுறுத்தியதை தொடர்ந்து மீண்டும் தமிழக பாஜக தரப்பில் இருந்து அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், அதில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிகார பூர்வ அறிவிப்பை இரு தரப்பினரும் வெளியிட்டுள்ளனர், ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முதல் கட்டமாக பதிமூன்று தொகுதிகள் எந்தந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மீதம் உள்ள தொகுதிகளை அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யவோம் என இரு தரப்பிலும் பேசி முடிவு செய்துள்ளனர்.

அதில் பாஜக தரப்பில் இருந்து முதல் 13 வேட்பாளர்கள் பெயரை குறிப்பிட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக முதல் 13 தொகுதியை அதிமுக உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் உறுதி செய்துள்ளது பாஜக, அந்த வரிசையில்,
பாஜக மாநில தலைவர் எல் முருகன் – பரமக்குடி தொகுதி,
H.ராஜா – தி.நகர் தொகுதி,
பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் -மதுரை வடக்கு தொகுதி.
KT ராகவன் – காஞ்சிபுரம் தொகுதி,
வானதி ஸ்ரீநிவாசன் – கோவை தெற்கு தொகுதி,

நயினார் நாகேந்திரன் – திருநெல்வேலி தொகுதி,
அண்ணாமலை Ex-IPS – அறவன்குறிஞ்சி
நாகேந்திரன் -ஓசூர் தொகுதி,
வசந்த ராஜன் – கிணத்துக்கடவு தொகுதி,
அகோரம் – பூம்புகார் தொகுதி,
VP துரைசாமி – ராசிபுரம் (தனி தொகுதி)
நடிகை குஷ்பு -சேப்பாக்கம் தொகுதி,
கு.க.செல்வம் – ஆயிரம் விளக்கு தொகுதி,

முதல் கட்ட பேச்சுவார்த்தையில் மேற்கண்ட 13 தொகுதிகள் முடிவு செய்துள்ளது அதிமுக-பாஜக கூட்டணி, இதில் ஒரு சில தொகுதிகள் மட்டும் கடைசி நேரத்தில் மாறலாம் என கூறப்படுகிறது, மீதம் உள்ள மற்ற தொகுதிகள் அடுத்தகட்ட பேச்சுவாத்தையில் முடிவு செய்து அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது, நாளை அமித்ஷா தமிழகம் வர இருக்கும் நிலையில், நாளையே தொகுதி பங்கீடு இறுதி செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .