மார்ச் மாதம் 11ம் தேதி நடைபெற இருக்கும் சிவராத்திரியை முன்னிட்டு அன்று தமிழகம் முழுவதும் மக்கள் அவரவர்களின் குல தெய்வத்தை வழிபட்டு வருவார்கள். தங்கள் குலதெய்வங்களை வழிபட அழகர்கோவிலில் உள்ள நூபுர கங்கையில் புனித தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள ராக்காயி மற்றும் 18கருப்பசாமி கருவறை முன்பு காப்பு கட்டுவது வழக்கம். புனித நீரை எடுத்துச் சென்று கோவில் மற்றும் வீடுகளில் தெளிப்பார்கள்.
மார்11ம் தேதி வர இருக்கும் சிவராத்தி முன்னிட்டு, நேற்று அழகர்கோவில் நூபுர கங்கையில் புனித நீராட கடல் போல் கூட்டம் அலைமோதியது. நூபுர கங்கையில் நீராட இலவச வரிசையில் நீண்டநேரம் காத்திருந்த பக்தர்கள். ஆனால் நேற்று இலவச தரிசனத்தில் சென்று நீராடிவிட்டு இறங்கும் பாதையில் ஒரு புதிய வரிசையை தொடங்கி 15 ரூபாய் கட்டணம் செலுத்துவதன் மூலம் விரைவாக நீராட வழிவகை செய்தது கோவில் நிர்வாகம்.
இதனால் திட்டமிட்டு இலவச வரிசையில் நீராட சென்றவர்களை தடுத்து நிறுத்தி சிறிது சிறிதாக அனுமதிக்கப்பட்டனர், கோவிலில் இந்த செயல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்களை முகம் சுளிக்க செய்தது. அழகர் கோவில் மலையில் உள்ள நூபுரகங்கை மற்றும் பழமுதிர்ச்சோலையில் கீழ் இருந்து செல்லும் வாகனங்கள் மேலே நிறுத்துவதற்கு போதுமான இட வசதிகள் இல்லை. நேற்று வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.
நேற்று வாகன கட்டணம் வசூல் அதிகரிப்பதற்காக வழக்கத்திற்கு மேலாக வாகனங்களை மலைக்கு மேலே அனுமதியளித்து நிறுத்த இடமில்லாமல் மழையில் செல்லும் சாலைகளில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மலைக்கு மேலே சென்று வர போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது குறிப்பிடத்தக்கது.