ரஷ்யாவில் நடைபெற்று வரும் விக்ரம் 12 வேடங்களில் நடிக்கும் “கோப்ரா” திரைப்படத்தின் படப்பிடிப்பு…

0
Follow on Google News

சமீபகாலமாகவே விக்ரமின் திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில்தான் தற்போது விக்ரம் நடித்து வரும் “கோப்ரா” என்ற திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இவர் தமிழ் நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வினோத் ராஜுக்கும், தாயான ராஜேஸ்வரிக்கும் மகனாக ஏப்ரல் மாதம் 17ம் தேதி, 1966ம் ஆண்டில் பிறந்தார்.

சினிமா துறையில் சி.வி. ஸ்ரீதர் இயக்கத்தில் 1990ம் ஆண்டு சினிமா துறையில் கால் பதித்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சேது, அருள், காசி, தில், தூள், பிதாமகன், அண்ணியன், ராவணன், சாமி, ஐ, தெய்வத்திருமகள் போன்ற திரைப்படங்கள் இவருக்கு கை கொடுத்தது. அண்ணியன் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இவர் இந்தத் திரைப்படத்திற்காக கடினமாக உழைத்து உடல் எடையை குறைத்துள்ளார். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையும் எடுத்து வந்தார். இவர் நடிப்பில் வெளிவந்து சர்ச்சைக்கு உள்ளான படம்தான் தெய்வத்திருமகள். ஆரம்பத்தில் படத்தின் பெயர் தெய்வத்திருமகன் என்று பெயரிடப்பட்டது. ஆனால் இந்தப் பெயருக்கு எதிர்ப்புகள் கிளம்ப தெய்வத்திருமகள் என்று மாற்றப்பட்டது.

குழந்தையை வளர்க்கும் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையின் ஒரு காவியத்தை இந்த திரைப்படம் கொடுத்தது. சில படங்கள் இவருக்கு தோல்வியை கொடுத்து வந்த நிலையில் தற்போது அனைவராலும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம் தான் கோப்ரா. இமைக்கா நொடிகள் திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் கோப்ரா திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் விக்ரம் 12 வேடங்களில் நடித்து வருவதால் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் நாயகி இதில் நடித்து வருகிறார். படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் ஒவ்வொன்றும் திரையரங்குகளை மிரள வைக்கப் போகிறது. ரஷ்யாவின் தற்போது படப்பிடிப்பு பணி நடைபெற்று வருகிறது. விக்ரமின் 12 ஆதாரங்கள் திரையரங்கை மிரட்ட “கோப்ரா” கமிங் சூன்…