நடிகை கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் தேடப்பட்டு வந்த முன்னால் அமைச்சர் மணிகண்டனை காவல்துறை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஜீன் 9 தேதி வரை தடை விதித்துள்ளது. மணிகண்டன் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினராகவும், தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர். அமைச்சர் மணிகண்டன் மீது கடந்த வாரம் நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் நடிகை கூறுகையில் முன்னால் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்தி உள்ளதாகவும், மூன்று முறை கருவுற்று அதைக் கட்டாயப்படுத்தி கலைக்க வைத்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டுவதாகவும் கூறினார்.
நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். காவல்துறை மணிகண்டனுக்கு எதிராக ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கியது. காவல் துறை மணிகண்டனை எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டதால் இதையடுத்து முன்னால் அமைச்சர் மணிகண்டன் தனது குடும்பத்துடன் வீட்டுக்கு பூட்டு போட்டு தலைமறைவானார்.
நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் நடிகை தான் மீது அவதூறு பரப்பி வருவதாகவும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மணிகண்டன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை எதிர்ப்பு தெரிவித்து நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். காவல்துறை மணிகண்டனுக்கு எதிராக ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கியது.
காவல் துறை மணிகண்டனை எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டதால் இதையடுத்து முன்னால் அமைச்சர் மணிகண்டன் தனது குடும்பத்துடன் வீட்டுக்கு பூட்டு போட்டு தலைமறைவானார். காவல்துறை மணிகண்டனை கைது செய்ய உறவினர்கள் நண்பர்கள் என அனைவரின் வீடுகளில் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
மணிகண்டன் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை சார்பாக வக்கீல் ராகவாச்சாரி ஆஜராகி ஜாமீன் வழங்க கூடாது என்றும் இந்த மனு நாங்கள் மனு தாக்கல் செய்துள்ளோம் என்று கூறினார். ஆனால் நீதிபதி சுப்ரமணியன் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்திற்கு வரவில்லை என்று கூறினார். இதையடுத்து அரசு வாக்கில் எழுந்து கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் ஜாமின் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
மணிகண்டன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜான் சத்தியன் மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து நீதிபதி ஆர். சுப்பிரமணியம் இன்னும் எதிர்த் தரப்பினர் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், இந்த விசாரணையை வரும் ஜூன் 9ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார். அதுவரை மணிகண்டனை போலீசார் கைது செய்ய தடை விதித்துள்ளார்.