மதுரை உத்தங்குடியில், சாலையோரம் உணவின்றி தவிக்கும் வாயில்லா ஜீவன்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கோவில்களுக்கு நேந்து விடப்படும் காளை மற்றும் பசு மாடுகளும் உணவின்றி, தண்ணீரின்றி வீதி வீதியாக தேடி அலைகிறது. வாயில்லா ஜீவனுக்கு யாரிடம் கேட்க தெரியும் பசிக்குது என்று. கோவிலுக்கு நேர்ந்து விடுவது தப்பு இல்ல…! ஆனால் நேர்ந்து விடப்படும் மாடுகள் யாரால் பராமரிக்கப்படும்.
அந்த ஜீவன்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு யாரு கொடுப்பது.? கோவில்களில் நேந்து விடப்படும் மாடுகளை பராமரிக்க வசதிகள் இருக்கா? இல்லை என்றால் கோவில்களின் நேந்து விடுவது தவறு இல்லையா? பசு மாடுகளை கடவுளாக பார்க்கும் நாம இந்த தப்பா செய்யலாமா? அப்படி செய்த தவறினால் தான் சாலைகளில் உணவின்றி, கிடைப்பதை உண்டு வாழ்ந்து வருகிறது வாயில்லா ஜீவன்கள்.
இன்று அப்படித்தான் ஒரு பசுமாடு சாலையில் உணவு தேடி வலம் வந்து கொண்டிருந்தது. ஒரு இடத்தில் கொட்டப்பட்டிருந்த காய்கறி கழிவுகளை உன்ற பசு திடீரென்று கீழே சுருண்டு விழுந்து துடி துடிக்க இறந்தது. அந்த பசுமாடு பசியில் சாப்பிட காய்கறி கழிவுகளுடன் சில பிளாஸ்டிக் கழிவுகளும் இருந்தது, அதையும் சேர்த்து உன்றதால் ஜீரணம் ஆகாமல் பசுவின் கழிவு வெளியேறாமல் வயிறு வீங்கி இறந்தது. பசு தொடர்ந்து பிளாஸ்டிக்கை உணவு என்று நினைத்து தினம் உண்றது.
தன்னுடைய தாய் பசு இறந்தது தெரியாமல் தாய் பசுவை தேடி அலைந்து கொண்டிருந்தது கான்று குட்டி. இந்த இரண்டு காட்சியை பார்க்கும்போது கண்ணில் நீர் பெருக்கெடுத்தது. நாம் எவ்வளவு சுயநலமாக இருக்கிறோம் என்பதை, இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். தயவு செய்து செல்போனில் சமூக ஆர்வலர்கள் போல் காட்டி கொள்வதை விட்டுவிட்டு சமூக ஆர்வலர்கள் களத்தில் செயல்படுங்கள். தயவு பிளாஸ்டிக் உபயோகத்தை தவிருங்கள். பயன்படுத்தினாலும் ரோடுகளில் தூக்கி வீசாமல் குப்பையில் போடுங்கள்…