நான்சென்ஸ் மாதிரி பேசாத… நீங்க அறிவோடு பேசுங்க… விவாத நிகழ்ச்சியில் நடந்த உச்சகட்ட மோதல்..! வைரல் வீடியோ..!

0
Follow on Google News

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, அசாம், திரிபுரா, குஜராத், கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நுகர்வோருக்கு மகிழ்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது. தமிழக அண்டை மாநிலமான கர்நாடகாவில் மத்திய அரசின் உற்பத்தி வரிக் குறைப்பின் எதிரொலியாக, பெட்ரோல் டீசல் இரண்டிலும் லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

அதே போன்று, கோவா மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாயும், டீசல் விலை ரூ17ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்திலும் குறைக்க வேண்டும் என மக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தற்போது தமிழக அரசியலில் பெட்ரோல் டீசல் விலை விவாத பொருளாக மாறியுள்ளது. தனியார் தொலைக்கட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் மற்றும் திமுகவை சேர்ந்த மனுஷ்ய புத்திரன் இருவருக்கு இடையில் நடந்த விவாதம் கடும் வாக்குவாதத்தில் முடிந்தது. விவாதத்தில் கலந்து கொண்ட சுமந்த் சி ராமனுக்கு பதில் தரும் விதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் பேசும்போது.

பா.ஜ.க பெட்ரோல் விலையேற்றியபோதெல்லாம் மெளனமாக இருந்ததோடு தொடர்ந்து பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த நீங்கள் இப்போது தமிழக அரசை விலைக்குறைப்பு நெருக்குவது ஏன்?” என்று கேட்டார். இதற்கு சுமந்த் “நான் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ட்வீட் போட்டிருக்கேன்” என்றார். உடனே திமுகவை சேர்ந்த மனுஷ்ய புத்திரன், சுமந்த் நீங்க என்ன நரேந்திர மோடியா.? அல்லது முக ஸ்டாலினா.?

உங்க ட்வீட் டையெல்லாம் ஃபாலோ பண்ணி ஞாப வச்சுக்க என்றும். அந்த ட்வீட்டுகு எல்லாம் ஏதாச்சும் வால்யூ இருக்கா என தொடர்ந்து மனுஷ்ய புத்திரன் பேச அதற்கு இடைமறித்த சுமந்த் சி ராமன், என்னை தனிப்பட்ட மறையில் பேச உங்களுக்கு உரிமை இல்லை, அறிவோடு யோசித்து பேசுங்கள், என்றார், அதற்கு நான்சென்ஸ் மாதிரி நீங்க பேசாதீங்க என மனுஷ் கூச்சலிட, அதற்கு கீப் கொயட் என சுமந்த் சத்தமிட, இருவருக்கும் இடையிலான உச்சகட்ட மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து திமுகவில் திமுகவில் எத்தனையோ சிறந்த பேச்சாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் மனுஷ்ய புத்திரன் மாதிரி ஆட்கள் திமுகவின் செய்தி தொடர்பாளராக இருப்பது அந்த கட்சிக்கே அவமானம் என சுமந்த் சி ராமன் பேசிய, இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.