விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மத ரீதியாக சர்ச்சைகளில் பல முறை சிக்கியுள்ளார். இதற்கு முன்பு ஒரு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய திருமாவளவன், குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோவில் என பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே போன்று பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும், சாதாரண அடிமட்டப்பெண்களுக்கும் பொறுந்தும். எல்லாப்பெண்களுக்கும் தீட்டு உண்டு” என்று இந்துமத பெண்களை விபச்சாரிகள் என திருமாவளவன் கடந்த வருடம் பேசியது இந்து பெண்கள் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியது.
இந்நிலையில் இது போன்று மத ரீதியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த திருமாவளவன் சமீப காலமாக மத ரீதியான எந்த ஒரு சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் சர்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ள திருமாவளவன், திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று, ஒரு கிருஸ்துவராக இருந்து தான் திருக்குறளை எழுதினார் என்று பேராசிரியர் தெய்வநாயகம் கருத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று.
திருமாவளவன் பேசியுள்ளது குறித்து இயக்குனர் பேரரசு திருவள்ளுவர் வாழ்ந்தது கி.மு. அதாவது கிருஸ்து பிறப்பதறகு முன்பு. அப்பறம் எப்படி இந்த ஞானதஸ்தானம்? இவருக்கு என்ன பிரச்சனை? எதுக்கு இந்த கட்ட பஞ்சாயத்து? என தரமான கேள்விகளால் தக்க பதிலடி கொடுத்துள்ளார் பேரராசு. இந்நிலையில் மேலும் திருமாவளவன் சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து பேசிய சர்சைக்குரிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், சிதம்பரம் நடராஜர் ஒரு காலில் ஆடக்கூடிய அந்த காட்சி என்பது, மயானத்தில் மயானம் என்றால் மரணத்தை குறிக்கின்ற ஒரு குறியீடு, மரணத்தை வென்றவன் என்கிற பொருளில் தான் உயிர்த்தெழுதல் சொல்லப்படுகிறது. உயிர்த்தெழுந்தார் என்றால் மரணத்தை வென்றார் என்று பொருள்.எனவே, இயேசு பெருமான் ஒற்றைக்காலில் நின்று கூத்தாடுவது என்பது மரணத்தை வென்ற மகிழ்ச்சியை வெற்றியை கொண்டாடுகின்ற ஒரு உருவகம் அதுதான் சிதம்பரத்தின் தலைமை கோவிலாக இருக்கின்றது என சர்ச்சைக்குரிய வகையில் திருமாவளவன் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைராலகி வருவது குறிப்பிடதக்கது.