உள்நோக்கத்துடனும் எந்த சமூகத்திற்கு எதிராகவும் பேசவில்லை…உயர்நிதிமன்றத்தில் அட்டகத்தி பா.ரஞ்சித் கதறலா.?

0
Follow on Google News

காதலிக்கு பெண் தன்னை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் என்றால் மேட்டரை முடி என இளைஞர்கள் மத்தியில் தவறான கலாச்சாரத்தை விதைக்கும் வகையில் படம் எடுத்த அட்டகத்தி இயக்குனர் பா.ரஞ்சித். கடந்த 2019ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நடந்த கூட்டம் ஒன்றில் இயக்குநர் அட்டகத்தி பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சாதிய கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்தது தஞ்சை டெல்டா பகுதியில் தான்.

அதற்கு முக்கிய காரணம் நிலங்கள். அதன் அடிப்படையில் பல பிரச்சனைகள் நடந்துள்ளன. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்பார்கள். ஆனால் ராஜராஜ சோழன் ஆண்ட காலம் தான் இருண்டகாலம். சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறையை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் தான். சாதியம் தலைத்தூக்கியதும் அப்போதுதான். மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலங்கள் முழுவதும் பறிக்கப்பட்டது அவரது ஆட்சிக் காலத்தில்தான். அதனால் தான் இருண்டகாலம் என்கிறோம் என்று பேசினார்.

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு இயக்குநர் அட்டகத்தி பா.ரஞ்சித் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் கேட்டு மதுரை கிளை சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அட்டகத்தி பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து தொடர் விசாரணை நடைபெற்று வந்த நிலையில். இயக்குநர் பா.ரஞ்சித், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்.

’’நீலப் புலிகள் அமைப்பு சார்பில் 2019 ஜூன் 5-ல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜசோழன் வரலாறு தொடர்பாக சில தகவல்களைக் குறிப்பிட்டேன். டெல்டா பகுதிகளில் நிலமற்ற மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து உமர் ஃபாரூக் எழுதிய, ’செந்தமிழ் நாட்டுச் சேரிகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததைத் தெரிவித்தேன். பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களையே நான் பொதுக் கூட்டத்தில் பேசினேன்.

நான் பேசிய தகவல்களை பலரும் பேசியுள்ளனர். ஆனால், எனது பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டது. நான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை. எனது பேச்சு எந்த சமூகத்திற்கு எதிராகவும் இல்லை. எனவே என் மீது திருப்பனந்தாள் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.’’ என அட்டக்கத்தி பா.ரஞ்சித் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டதை தான் குறிப்பிட்டேன் நானாக எதும் பேசவில்லை என பா.ரஞ்சித் கதறும் வகையில் அமைத்திருந்ததாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக தம்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் பா.ரஞ்சித் தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது, பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா என ஐகோர்ட் மதுரைக் கிளை இதற்கு முன்பு கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடதக்கது.