கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து நான்கு வருடங்களாக நடைபெற்று வந்த நீட் தேர்வுக்கு எதிராக கடும் எதிப்புகளை தெரிவித்து வந்த நடிகர்கள், ஏன் கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நீட் தேர்வின் போது மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் அப்போது நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது.
ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். ‘தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை’ என்ற செய்து, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுஒறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுப்பிடிக்கும் சாணக்கியர்கள், ‘அனல் பறக்க’ விவாதிப்பார்கள். நீட் போன்ற ‘மனுநீதி’ தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.
அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்இற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாக கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன். ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை “பலியிட’ நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கறார்கள்.
அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது. சாதரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் வைக்கற “நீட் தேர்வுக்கு’ எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்” என நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார், இதே போன்று தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடிகர்கள் விஜயசேதுபதி மற்றும் நடிகர் சித்தார்த் கடந்த அதிமுக ஆட்சியில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் போது திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதிகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆட்சியை திமுக பிடித்துள்ள நிலையில், இந்த வருடம் நடந்த நீட் தேர்வில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர்கள், சூர்யா, விஜயசேதுபதி, சித்தார்த் போன்றவர்கள் மௌனமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி, இது குறித்து கூறுகையில், நீட் தேர்வு காரணம் தற்போது நடந்துள்ள மாணவர்களில் தற்கொலைக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க்க வேண்டும். அதிமுக மற்றும் பாஜக அரசை கடந்த காலங்களில் விமர்சனம் செய்த நடிகர்கள், சூர்யா, விஜய் சேதுபதி, திராவிட குஞ்சு சித்தார்த்… தம்பிகளா எங்கடா போனீங்க.? என கேள்வி எழுப்பியுள்ளார் திருமாறன் ஜி. இதன் வீடியோ லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.