சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவகுமார், தான் இளம் வயதில் வரைந்த ஓவியங்களை காண்பித்து, அந்த ஓவியம் வரைந்த அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார், மேலும் சமீபத்தில் தனது மகன் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஜெய் பீம் படத்தின் இயக்குனர் மற்றும் ஆர்ட் டைரக்டர் ஆகியரை பாராட்டிய சிவகுமார், இவர்கள் தனது மகன் போன்றோர் என பேசினார்.
மேலும், ஜெய்பீம் போன்று படத்தின் இயக்குனர் கூட மீண்டும் இது போன்ற படத்தை எடுக்க முடியாது, ஒரு ஒடுக்கப்பட்ட மக்களை பற்றி படம் எடுத்து, தமிழக முதல்வரே அந்த படத்தை பார்த்து எமோசனல் ஆகி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டது உலகத்தில் வேறு எங்குமே நடக்கவில்லை இதற்கு காரணம் இங்கே இருக்கும் இயக்குனர் ஞானவேல் எடுத்த ஜெய்பீம் திரைப்படம் தான் முக்கிய காரணம் என தெரிவித்த சிவகுமார்.
நான் 10 மாத குழந்தையாக இருந்தபோது எனது தந்தை இறந்துவிட்டார் , எனது தந்தை முகம் எப்படி இருக்கும் என்று கூட எனக்கு தெரியாது. எனக்கு நான்கு வயது இருக்கும்போது எனது 16 வயது அண்ணன் தற்போது உள்ள கொரானா போன்று அப்போது பிளேக் நோயில் இறந்து விட்டார். நான் நாலு வயது பையனாக இருந்தபோது அப்போது எனக்கு கொஞ்சம் பால்டாயில் அல்லது எருக்கம்பால் கொடுத்து இருந்தால் என் கதை முடிந்திருக்கும்.
ஆனால் சாமி கொடுத்த குழந்தையை கொலை செய்யக் கூடாது என்பதற்காகத்தான் எனது அம்மா என்னை வளர்த்ததால் இன்று நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த தாயை நினைத்து பார்க்க வேண்டும், மேலும் எனது மகன் சூர்யா காதலித்து திருமணம் செய்கிறார் என்றால் நான் சூர்யாவாக இருந்திருந்தாலும் நானும் காதலித்து இருப்பேன், உங்களுக்கு சாப்பாட்டுக்கே இல்லையே லவ் எப்படி பண்ணுவ,
சோத்துக்கே வழியில்லாமல் லவ் எப்படி பண்ணுவ நான் சூர்யா பிறந்திருந்தால் நானும் லவ் பண்ணி இருப்பேன். இன்று மதிய சாப்பாட்டுக்கு சூர்யா குடும்பத்துடன் சென்றால் 15 ஆயிரம் செலவாகிறது ஆனால் நான் வெறும் பதினைந்து ரூபாய் ரூம் வாடகையில் 7 வருடம் வாழ்ந்தேன் என்று நடிகர் சிவகுமார் யாரை உனக்கு சாப்பாட்டுக்கு வழியில்லை என குறிப்பிட்டுகிறார், சூர்யாவை விமர்சனம் செய்து வருகின்றவர்களையா.? அல்லது தன்னை தானே வா.? என அவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.