திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. சுமார் 70 வருட திமுக அரசியல் வரலாற்றில் அண்ணாதுரை தொடங்கி தற்போது முக ஸ்டாலின் வரை மத்திய அரசு என்று அழைத்து வந்த நிலையில் தற்போது புதியதாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசை ஒன்றிய அரசு என சர்ச்சைக்குரிய வகையில் திமுக தலைவர் அழைப்பது மட்டுமின்றி திமுக அதிகாரப்பூர்வ ஐடி பிரிவு சமூக வலைதளத்தில்.
திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, “ கோரிக்கைதான் கைவிடப்பட்டது, ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன” என்றார் அண்ணா. என சமீபத்தில் பதிவு செய்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போன்று இந்து அறநிலையத்துறையை தொடர்ந்து இந்து என்கிற வார்த்தையை புறக்கணித்து அறநிலை துறை என்று மட்டுமே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் திமுக அரசு வெளியிடும் இந்து அறநிலையத்துறை தொடர்பான அறிக்கையில் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு புதியதாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் அறநிலையயத் துறை என்று மட்டும் குறிப்பிட்டு இந்து என்கிற வார்த்தை திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்துக்கள் மத்தியில் திமுக அரசின் இந்த செயலுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், இந்து விரோத, இந்திய விரோத திமுக அரசு இந்து அறநிலையத்துறை என்கிற தமிழகத்தில் பாரம்பரியமாக வழங்கி வந்த துறையில் இந்து என்ற வார்த்தையை தீய உள்நோக்கத்துடன் தவிர்க்கிறது. இந்து ஓட்டு இனிக்கிறது, இந்து என்றால் கசக்கிறதா.? இதை வன்மையாக கண்டிக்கிறேன்.உடனே பெயர் பலகையில் இந்து அறநிலையத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பேராசிரியர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.