அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாக பாஜகவை எதிர் கொள்ள முடியமால் தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக பொய்யான செய்திகளையும், அவதூறுகளையும் சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். சிலர் திட்டமிட்டு பரப்பப்படும் பாஜகவுக்கு எதிரான பொய் செய்திகள் உண்மை இல்லை என்பதை ஒவ்வொரு முறையில் பாஜக தரப்பில் இருந்து ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டு வந்தாலும், பொய் செய்தியை பரப்புவோர் அவர்களின் செயல்களை நிறுத்தி கொள்வதாக இல்லை.
இந்நிலையில் இன்று நாடு முளுவதும் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரத்த தான முகாம்கள், இலவச மருத்துவ முகாம், அசுத்தமான இடங்களை தூய்மை படுத்தும் பனி, ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள், அன்னதானம் என தமிழகம் முளுவதும் பாஜக நிர்வாகிகள் பல்வேறு விதமாக பிரதமர் மோடி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை பெசன்ட் நகர் அருகே உள்ள கடற்கரையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் ஆகியோருடன் சேர்ந்து பாஜக நிர்வாகிகள் அனைவரும் கடற்கரையில் இருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணியில் ஈடுப்பட்டனர், அணைத்து குப்பைகளை பிளாஸ்டிக் பையில் சேகரித்தனர்.
குப்பைகளை சேகரித்த பிளாஸ்டிக் பைகளை கடற்கரையில் ஒரு பகுதிகளில் வைத்து விட்டு, அங்கே மீனவர்கள் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிரதமர் மோடி பிறந்த தினத்தை கொண்டாடினர், இந்த நிகழ்வு முடிந்ததும் பாஜக நிர்வாகிகள் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அடங்கிய பிளாஸ்டிக் மூட்டைகளை குப்பை லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர், ஆனால் பாஜகவினர் கேக் வெட்ட சென்ற அந்த இடைப்பட்ட நேரத்தில்.சிலர் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட குப்பை மூட்டைகளை கடற்கரையிலே விட்டு சென்றதாக பொய்யான செய்தியை சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்,
இது குறித்து பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் தனது டிவீட்டர் பக்கத்தில், கடற்கரையோரத்தில் உள்ள குப்பை சேகரித்த பிறகு அங்கிருந்த மீனவர்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடும் சமயத்தில் எப்போதும் பாஜகவை குறை சொல்லும் நோக்கம், அனைத்து பைகளும் எங்கள் நிர்வாகிகளால் மாநகராட்சி வண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டன என புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டார்.