கொரோனா உயிரிழப்புகளுக்கும் அடிமைகளும் ஆதிக்கவாதிகளுமே பொறுப்பு.! உதயநிதி ஆவேசம்.!

0
Follow on Google News

இந்தியாவிலேயே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் திகழுகிறது.தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருந்து வருகிறது, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அத்துடன் தடுப்பூசி போடும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.

இதையொட்டி தமிழகத்தில் கொரோனா ஊசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் 12.1% தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. அதே போன்று சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், போலியோ-மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை பொதுமக்களிடம் சேர்த்ததில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் வரை நமக்கு அனுப்பப்பட்ட 54.28 லட்சம் தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளது தகவலறியும் உரிமைசட்டம் மூலம் மத்திய அரசு தந்த இத்தகவல், அடிமை அரசின் நிர்வாக குளறுபடியை காட்டுகிறது.

கொரோனா தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியை ஒருங்கிணைக்காமல், இறுதிகட்ட கொள்ளை-போலி விளம்பரங்களில் கவனம் செலுத்தியதே இதற்கு காரணம் இப்படி மக்கள் மீது அக்கறையற்ற அடிமை அரசால், கொரோனா 2-ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. கொரோனா உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும், கொள்ளையில் மட்டுமே கவனம் செலுத்திய அடிமைகளும்-அவர்களை ஆட்டுவிக்கும் ஆதிக்கவாதிகளுமே பொறுப்பு. என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.