அட வெட்கம் கெட்டவர்களே..! இதெல்லாம் ஒரு பொழப்பு.? 200 ரூபாய்க்கு இப்படியா.? வெளிச்சம் போட்டு காண்பித்த அண்ணாமலை…

0
Follow on Google News

பாஜக, பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொய் செய்திகளை திட்டமிட்டு சில விஷமிகள் பரப்பி வருகின்றனர். மேலும் பாஜகவில் இருக்கும் பெண் அரசியல் தலைவர்கள் குறித்து ஆபாசமாக சமூக வலைதளத்தில் குறிப்பாக திமுக நிர்வாகிகள் இதற்கு முன் பதிவு செய்திருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது குறித்து பாஜக சார்பில் போலீஸ் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பாலியல் ரீதியாக பெண் அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தவர்கள் மீது புகார் கொடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது சென்னையில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிவாரண பொருள் வழங்கி மக்களின் குறைகளை கேட்கும் புகைப்படம் ஓன்று சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அதில் திமுக ஆதரவு முகநூல் பக்கங்களில், மோடி ஏன் தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி அறிவிக்கவில்லை என கேட்ட பெண்ணை மிரட்டுவதாகவும், மேலும் சிலிண்டர் விலை ஏற்றத்தை தட்டி கேட்ட பெண்னை மிரட்டுவதாகவும், என பல்வேறு கோணங்களில் திட்டமிட்டு பொய் செய்திகள் அண்ணாமலை குறித்து பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் பொய் செய்திகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அண்ணாமலை.

இது அறிவாலயம் நாடக குழுக்களில் 200 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் எப்பபோதும் போல் செயல்படும் வேலை. 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாடக நிறுவனம் ஒரு அரசியல் கட்சியாக தற்போது ஆட்சியில் உள்ள கட்சி எப்படி செயல்படுகிறது எனபதை புரிந்துகொள்ள வீடியோ ஓன்று இணைக்கப்பட்டுள்ளது என பதிவு செய்துள்ள அண்ணாமலை, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் யாரையும் மிரட்டவில்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தெளிவாக உள்ளது.

மேலும் இந்த விடியோவை பார்த்து தமிழக பாஜக குறித்து புரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ள அண்ணாமலை. இது போன்று செயல்படுவது 200 ரூபாய்க்கு வேலை செய்யும் வஞ்சகர்களும் மற்றும், சூட், பேண்ட் அணிந்து கொண்டு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சில பெரிய மோசடிக்காரர்களும் தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் அட வெட்கம் கெட்டவர்களே..!இதெல்லாம் ஒரு பொழப்பு என பொய் செய்திகளை பரப்புவர்களை வசைபாடி வருகின்றனர்.

வடிவேலு மாதிரி பேச கூடாது முதல்வர் மாதிரி பேச வேண்டும்.. வெளுத்து வாங்கிய அண்ணாமலை