அங்க இங்க சுத்தி எம்ஜிஆரையே கேவலப்படுத்திய சீமான்.!மௌனமாக அதிமுக.. கடும் கொந்தளிப்பில் எம்ஜிஆர் ரசிகர்கள்.!

0
Follow on Google News

கருணாநிதி ஐயா மூடிய சாராயக்கடையை எம்ஜிஆர் திறந்து காய்ச்சி விற்பனை செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசியபோது, எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் என பலர் கூறி வருவது குறித்து கேள்வி எழுப்பிய போது, எம்ஜிஆர் ஆட்சியில் எது சிறப்பாக இருந்தது என்று முதலில் சொல்லுங்கள் என கோபத்துடன் கேட்ட சீமான்.

மேலும், எம்ஜிஆரை நாங்கள் போற்றுவதற்கு காரணம் விடுதலை புலி இயக்கத்தின் தலைவர், பிரபாகரன் அவர்களுக்கு உண்மையாக இருந்தார், பிரபாகரனும் அவருக்கு உண்மையாக இருந்தார், அந்த இடத்தில் நாங்கள் எம்ஜிஆரை தொடவே இல்லை, வேறு என்ன அவருடைய ஆட்சியில் சிறப்பு இருந்தது என்று சொல்லுங்கள் என சீமான் பேசினார், மேலும் செய்தியாளர்கள் அவருடைய ஆட்சி பொற்கால ஆட்சி என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு,

அது யாராவது ஒரு பைத்தியக்காரன் சொல்லுவான், அதை ஏதாவது ஒரு பைத்தியக்காரன் கேட்பான் என்று சீமான் பதிலளித்தார், தாய் வழி கல்வியை தமிழ் மொழியை ஆங்கில வழி கல்விக்கு மாற்றிய பெருந்தகை அவர்தான், அரசிடம் இருந்த மருத்துவத்தை கல்வியை தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்த பெருந்தகை அவர்தான், முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கும் உரிமை எங்களிடம் இருந்தது அதையும் எந்த பாசத்தில் கேரளாவுக்கு கொடுத்து இருப்பார் என்பது உங்களுக்குத் தெரியும், கேரளாவுக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தவர் பெருந்தகை அவர்தான்.

ஐயா கலைஞர் அவர்கள் சாராயக்கடையை திறந்தாங்க ஆனால் திரும்பவும் மூடி இருந்தார்கள், ஆனால் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பின்பு மீண்டும் சாராயக்கடையை திறந்தார், யாரை வைத்து சாராயம் காய்ச்சினார், யாரை வைத்து சாராயத்தை எம்ஜிஆர் விற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும், பிறகு என்ன சிறப்பு சிறப்பு என்று சொல்கிறீர்கள், எம்ஜிஆர் ஆட்சியில் என்ன சிறப்பு இருந்தது என்பதை நீங்களே சொல்லுங்கள் இதில் பெருமை பேச வேண்டியது என்ன இருக்கு என சீமான் பேசியிருப்பது எம்ஜிஆர் ரசிகர்களை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்த விவகாரத்தில் அதிமுக அமைதியாக இருந்துவருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.