கடந்த ஜனவரி 10ஆம் தேதி மதுரை திருப்பாலை கிராமத்தில் உள்ள மந்தையில் பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது, இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர், இந்த நிகழ்வுக்கு வந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஹரிஹரன் மற்றும் பாஜக ஐடி பிரிவு மாவட்ட தலைவர் பழனிவேல் ஆகியோர் அந்த காரை சுற்றிவளைத்த எஸ்டிபிஐ மற்றும் PFI கட்சியை சேர்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
சுமார் SDPI மற்றும் PFI கட்சியை சேர்ந்த பதினைந்து நபர்கள் கொண்ட கும்பல் பெரிய கற்கள், உருட்டுகட்டைகளை தூக்கிக் கொண்டு கொலை வெறியுடன் தாக்குதலுக்கு உள்ளான காரை நோக்கி ஓடிவந்து காரை வழி மறித்துள்ளனர், ஆனால் வாகனத்தில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து காரை விட்டு இறங்காமல் காரை பின்னோக்கி ஓட்டி சென்றுள்ளனர், அப்போது காரை விரட்டி வந்த நபர்கள் இங்கிருந்து ஓடிப்போங்கடா என்றும்,
இங்கே வந்தால் உங்களையும் உங்க காரையும் பெட்ரோல் மாற்றி கொளுத்தி விடுவோம். உங்களை
விடமாட்டோம் கொன்று விடுவோம் என்று மிரட்டி விரட்டி வந்ததாக கூறப்படுகிறது, இதனால் உயிருக்குப் பயந்து வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால், இந்த தாக்குதலில் இருந்து எந்த ஒரு சிறு காயங்கள் இல்லாமல் பாஜகவினர் தப்பித்தாலும் வாகனம் பலத்த சேதமடைந்தது, இதனைத்தொடர்ந்து மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் பாஜக சார்பில் தாக்குதலுக்கு உள்ளான பாஜகவினர் புகார் மனு கொடுத்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டதாக, SDPI கட்சியை சேர்ந்த கிளைச்செயலாளர் திலக் சிக்கந்தர். SDPI கட்சியின் சுல்தான் அலாவுதின், PFI கட்சியை சேர்ந்த வேக்பரும், PFI யின் ஆனையூர் பகுதி தலைவர் ஷேக் இப்ராஹிம், PFI யின் மதுரை வடக்கு பகுதி செயலாளர், முகமது ஐசக் SDPI கட்சியின் செயற்குழு உறுப்பினர் ரம்ஜான், ஆனையூர் பகுதி SDPI ஹாசிப், திருப்பாலை பகுதியை சேர்ந்த SDPI யை சேர்ந்த முகம்மது இப்ராகிம், ATC யின் மாவட்ட தலைவர் முகமது அப்துல்லா மற்றும் பலரது மீதும் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் FIR பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த அன்று மாலை மதுரை புறநகர் மாவட்ட தலைவர் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானதும், அலுவலகத்தின் இருந்த மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் இருந்த அறை பூட்டப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் குறிப்பிட்டத்தக்கது.