அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்ளும் சசிகலா..! அதிர்ச்சியில் அமமுக, வரவேற்கிறது பாஜக…!

0
Follow on Google News

சசிகலா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர். ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து எடப்பாடி முதல்வர் ஆக்கினார். சொத்துக்குவிப்பு வழக்கில் எதிராக தீர்ப்பு வந்தது. சிறைப்பிடிக்கப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள அக்ரஹார அனுப்பப்பட்டார். சசிகலா சிறை சென்ற பிறகு தினகரன் கட்டுப்பாட்டுக்குள் கட்சி வரவே, இரட்டை இலை சின்னத்தை 100 கோடி கொடுத்து வாங்கும் புகாரால் அவரை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி.

சிறை சென்ற சசிகலா திரும்பி வருவதற்குள் கட்சியை வலுப்படுத்த திட்டம் போட்டார் முதல்வர் எடப்பாடி. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற மற்றொரு அணியான ஓபிஎஸ் அணி எடப்பாடி உடன் வந்து இணைந்தது. இந்த சமரசத்திற்கு முக்கிய காரணமே பாஜக என்று அப்போது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினார்.

கட்சியை விட்டு நீக்கப்பட்ட தினகரன் சென்னை ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவை வீழ்த்திய தினகரன். இதன் பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில் சிறையில் இருந்து சசிகலா விடுதலையான போது அதிமுகவை கைப்பற்றுவார் என்று அனைவராலும் பேசப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு சசிகலாவை அதிமுக கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி திட்டவட்டமாகக் கூறினார்.

தற்போது சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த வேலையில் நேற்று இரவு சசிகலா வெளியிட்ட அறிக்கையை கண்டு அனைவரும் அதிர்ந்து விட்டனர். சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாகவும் நம்முடைய நீண்ட கால அரசியல் எதிரியை வீழ்த்த அனைவரும் ஒன்று சேர வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.சசிகலாவின் இந்த முடிவு தினகரனுக்கு அதிர்ச்சியை தந்தாலும் பாஜக வரவேற்றுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் தினகரனின் கனவு வீணா போச்சே என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.