ஓபிஎஸ் மற்றும் மாஜி அமைச்சர்கள் படை சூழ அதிமுக தலைமையகம் வருகிறார் சசிகலா….பீதியில் எடப்பாடி அவசர ஆலோசனை..

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வம் இடையே உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது, தேர்தலுக்கு முன்பே எடப்பாடி பழனிச்சாமி அதிக்கம் அதிகரிக்க தொடங்கியதை அறிந்த ஓபிஎஸ், இவரின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த சசிகலா தான் ஒரே தீர்வு என முடிவு செய்து சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பேச்சுவார்தை நடைபெற்ற போது முழு சம்மதம் தெரிவித்தார், ஆனால் எடப்பாடி உடன்படவில்லை.

இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்பு அதிமுக தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என அதிமுக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பகிரங்கமாக குற்றம் சாட்டிய ஓபிஎஸ், எதிர்கட்சி தலைவராக தன்னை முன்னிறுத்தினர், ஆனால் எடப்பாடி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் அதிகம் என்பதால், எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்தெடுக்கபட்டர், இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டத்தின் பாதியிலே வெளியேறினார் பன்னீர் செல்வம்.

இதனை தொடர்ந்து தேர்தலுக்கு முன்பு வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் ஒன்றாக அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் தேர்தலுக்கு பின்பு நடத்த மோதலுக்கு பின்பு ஓபிஎஸ் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டு வருகிறார், இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது பண்ணை வீட்டில் இருந்து கொன்டே அரசியல் நகர்வுகளை தீவிர படுத்தி வருகிறார் ஓபிஎஸ்.

கொங்கு மண்டலத்தை தவிர்த்து தமிழகம் முழுவது உள்ள மாஜி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஆதரவு தெரிவிக்க தயார் என குறிப்பிட்டுள்ள நிலையில், ஓபிஎஸ், சசிகலாவுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தோல்வியடைய செய்ய பல்வேறு உள்ளடி வேலை பார்த்து வந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி, அதையும் கடந்து தான் ஓபிஎஸ் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் அதிமுக தலைமையகத்துக்கு சசிகலாவை அழைத்து வந்து அமர வைத்து தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்த ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார், இது குறித்து சசிகலா மற்றும் மாஜி அமைச்சார்களிடம் பேசியுள்ளார், இந்த திட்டம் உறுதியானதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு தளர்வு ஏற்பட்ட பின்பு மாஜி அமைச்சர்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு,சசிகலா ஆதரவாளர்கள் படை சூழ அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் அதிமுக தலைமையகத்துக்கு சசிகலாவை அழைத்து வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் அறிந்த எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, பெஞ்சமின், சென்னை மாவட்ட செயலாளர்கள் தி.நகர் சத்யா, விருகை ரவி, பாலகங்கா, கே.பி.கந்தன் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் என 8 பேர் கலந்து கொண்டனர். இவர்களுடன் எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமை அலுவலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் சசிகலா வருகையை எப்படி முறியடிக்க வேண்டும் என ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.