ரூ.100 கோடி ஊழல்.. ரூ.61 கோடி ஊழல்கான ஆதாரங்கள்.. சிறை செல்கிறார் ராஜேந்திர பாலாஜி.! திமுக அரசு தீவிரம்..

0
Follow on Google News

தமிழகத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி, சர்ச்சைக்குரிய வகையில் பேசி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வந்துள்ளார், திமுக தலைவர் முக ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது மிக கடினமாக விமர்சனம் செய்தவர் ராஜேந்திர பாலாஜி, இவரின் விமர்சனக்களில் குற்றாலத்துக்கு வா நம்ம ரெண்டு பெரும் குளிப்போம் நான் அப்படியே இருப்பேன், ஆனால் உன்னுடைய டோப்பா முடி கலைந்துவிடும் என முக ஸ்டாலினை நக்கல் செய்வது.

மேலும் உச்சகட்டமாக நீ ஆம்பளையா இருந்தா என்னுடைய ஊருக்கு வா ..என ஒருமையில் மிக தரைகுறைவாக முக ஸ்டாலினை கடுமையாக தாக்கி தொடர்ந்து பேசி வந்தார் ராஜேந்திர பாலாஜி, அப்போது திமுக முக்கிய தலைவர்கள் அனைவரும் கழக ஆட்சி அமைந்ததும் இவரை எதவாது செய்ய வேண்டும் என திமுக தலைமையிடம் வலியுறுத்தி வந்தனர், அதே போன்று ராஜபாளையத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முக ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்ததும் ராஜேந்திர பாலாஜி மீது உள்ள ஊழல் குற்றசாட்டு விசாரிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்படுவர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி பால்வள துறை அமைச்சராக இருந்த போது, ஆவினில் 100 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, ஆவினில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகளை களை எடுத்தால் மட்டுமே இழப்பீட்டை சரி செய்ய முடியும் என்று பால் முகவர்கள் சங்க தலைவர் சில ஆதாரங்களை சேகரித்து அதை தற்போது உள்ள திமுக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைமைச் செயலகத்தில் பால்வளத் துறை அமைச்சரை சந்தித்து பால் முகவர்கள் சங்க தலைவர் மனு ஒன்றை கொடுத்தார், அதில் கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது பினாமிகள் 100 கோடி அளவிற்கு அவர் சம்பந்தப்பட்ட துறையில் ஊழல் செய்துள்ளதாகவும், அதில் ரூபாய் 61 கோடி ஊழல் அதற்கான ஆதாரங்களை தற்போது உள்ள பால்வளத் துறை அமைச்சரிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல ஆவினில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகளை களை எடுத்தால் மட்டுமே இழப்பீட்டை சரி செய்ய முடியும் என்றும் அவர் கோரியுள்ளார், இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பல்வளத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார், மேலும் இது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, இந்த நிலையில் இந்த ஊழல் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல் ஒன்று பெரும் பரபரப்பு ஆக பேசப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக ராஜேந்திர பாலாஜி திமுக அரசை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.