விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ரஜினிகாந்த்..! இரண்டு குழந்தைகளுடன் கதறி அழுத லதா…. பின் நடந்தது என்ன.?

1

பெங்களுரில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்த சிவாஜி ராவ் சினிமா மீது உள்ள மோகத்தில் மெட்ராஸ் பிலிம் இண்டஸ்ட்ரியில் நண்பர் ராஜ் பகதூர் உதவியுடன் படித்தார், பின்னர் இயக்குனர் இமையம் கே.பாலசந்தர் பார்வையில் சிவாஜி ராவ் தென்பட ரஜினிகாந்த் என பெயர் மாற்றப்பட்டு 1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டு அடுத்த சில வருடங்களில் சினிமாவில் முக்கிய கதாநாயகனாக வலம் வந்தார்.

தனது 31 வயதில் பின்னணி பாடகியாக இருந்த லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த், இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு குழந்தைகள் பிறந்து இல்லற வாழ்கை சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், மது பழக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ரஜினிகாந்த், மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி லதாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார், ஒரு கட்டத்தில் குடும்பத்தை முழுமையாக வெறுக்கும் நிலைக்கு வந்துள்ளார் ரஜினிகாந்த்.

இதனை தொடர்ந்து குடும்பத்தை விட்டு பிரிந்து சில காலம் தனியாக வாழ்ந்து வந்த ரஜினிகாந்த், அவருடைய மனைவி லதாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வரும் ரஜினிகாந்த் சில நாட்களில் பிரச்சனை சரியாகி மீண்டும் குடும்பத்துடன் இணைந்து விடுவார் என இரண்டு குழந்தைகளுடன் காத்திருந்த லதா விவாகரத்து நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே ரஜினிகாந்த் குருநாதர் இயக்குனர் பாலச்சந்தரை நேரில் சந்தித்து நடந்ததை தெரிவித்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார் லதா, இதன் பின்பு ரஜினிகாந்தை நேரில் அழைத்து பேசிய இயக்குனர் பாலச்சந்தர், சமாதனம் பேசியுள்ளார், ஆனால் ரஜினிகாந்த் தனக்கு குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார், அதற்கு வேறு ஏதவாது பெண்ணை நீ இரண்டாவது திருமணம் செய்ய திட்டம் இருக்கின்றதா என பாலச்சந்தர் கேட்க அப்படியெல்லாம் இல்லை என தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

பின் உன்னுடைய இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பார்,தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நீ, விவாகரத்து செய்தால் பெண்கள் மத்தியில் உனக்கு ஆதரவு கிடைக்காது, பின் சினிமாவிலும் தோல்வியை சந்திக்க நேரிடும் என பாலசந்தர் அறிவுரையை ஏற்று மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், இந்த விவகாரம் வருடங்கள் பல கடந்து தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

  1. மானங்கொட்ட ரஜினிகாந்த்,

Comments are closed.