திருப்பதியில் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தது யார்.? சிவகுமார் குறித்து பொய் செய்தி பரப்பியதாக அவதூறு பரப்பியவருக்கு பதிலடி..!

0
Follow on Google News

கடந்த வாரம் நமது தினசேவல் நியூஸ் இணையதளத்தில் நடிகர் சிவகுமார் குறித்து ஒரு செய்தி வெளியிட்டிருதோம். அதில் நடிகர் சிவகுமார் அவரது மகன் சூர்யா, மருமகள் ஜோதிகா ஆகிய சிவகுமார் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து எதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடதக்கது, அந்த வகையில் கடந்த வருடம் நடிகர் சிவகுமார் திருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் சர்ச்சையானது, பின் அவர் மீது திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, தற்போது அந்த வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இலக்கியம்.. ஆரோக்கியம்… இல்லறம் என்கிற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் கடந்த வருடம் பேசியதாவது, “கடவுள் இருக்கிறார் என நினைத்தீர்களானால் சுனாமி ஏன் வந்தது? கோயிலில் இன்னமும் தீண்டாமை உள்ளது. ஏழை, பணக்காரன் பாகுபாடு கோயில்களில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடி கோடியாக காணிக்கை கொட்டுகிறது. காட்பாடியிலிருந்து 48 நாள் விரதமிருந்து, நடந்தே திருப்பதி கோயிலுக்கு செல்கிறான் ஒரு ஏழை பக்தன்.

இவன் நீண்டவரிசையில் காத்திருந்து பின்னர் தான் சாமியை தரிசனம் செய்கிறான். அங்கு பெரிய மூங்கில் குச்சியில் ‘ஜரகண்டி.. ஜரகண்டி’ எனஅடித்து விரட்டுகிறார்கள். அதுவே ஒரு பணக்காரன், மனைவிக்கு தெரியாமல் வேறு இளம் பெண்ணை அழைத்துக் கொண்டு திருமலைக்கு சென்று, விடுதி அறையில் தங்கி, மதுபோதையில் உல்லாசமாக இருந்து விட்டு, காலையில் குளிக்காமல் கோயிலுக்குள் சென்றால், அவனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு சிவக்குமார் பேசியது பெரும் சர்ச்சையை வெடித்தது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்து, திருப்பதி கோவிலை கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பேசிய சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,மேலும் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, குளிக்காமல் திருப்பதி கோவிலுக்குள் வந்த பணக்காரர் யார்.? அவருடன் இருந்த இளம்பெண் யார் என சிவகுமாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயில்குறித்து அவதூறு பேசியதாகநடிகர் சிவக்குமார் மீது திருமலை போலீஸார் அப்போது வழக்குப்பதிவு செய்தனர், இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில், தமிழ் திரைப்படத்துறையின் பழம்பெரும் நடிகர் சிவக்குமார்திருப்பதி கோயில் குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க வகையில்பேசிய ஒரு வீடியோவை தமிழ்மாயன் என்பவர் தேவஸ்தானத்துக்கு அனுப்பி வைத்தார்.

அந்த வீடியோவை ஆய்வு செய்தோம். சிவக்குமாரின் பேச்சு, உலகம்முழுவதும் உள்ள பல கோடி ஏழுமலையான் பக்தர்களுக்கும் தேவஸ்தானத்தின் பெருமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதால், இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி திருமலை 2-வது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஆந்திர, மற்றும் தெலுங்கானா மாநிலக்களில் கடந்த வருடம் திருப்பதி கோவில் குறித்து அவதூறு பேசிய சிவகுமார் மீது ஏன் இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடைபெற வில்லை என பொது தளங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் மேலும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பிலும் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் விரைவில் சென்னை விரைந்து வந்து நடிகர் சிவகுமாரிடம் இது குறித்து ஆந்திர போலீசார் விசாரணை நடத்தலாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விசாரணையின் போது யார் திருப்பதியில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பணக்காரர் யார், அந்த இளம்பெண் யார் என்கிற தகவல் வெளியாகும் என்றும், அல்லது இது எதார்த்தமாக தான் பேசுனேன் என சிவகுமார் கூறும் பட்சத்தில் சிவகுமார் மீது பதியப்பட்டுள்ள அவதூறு வழக்கு மேலும் வலுவடையும் என எதிர்பக்கப்படுகிறது என்கிற செய்தியை இளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம்… கைதாகிறாரா சிவகுமார்.? சென்னை விரைகிறது ஆந்திர போலீஸ்..! என்கிற தலைப்பில் கடந்த வாரம் வெளியிட்டிருதோம்.

இதில் சிவகுமார் பேசிய வீடியோவில் பேசிய அந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் அவர் பேசிய அந்த பணக்காரர் மனைவிக்கு தெரியாமல் இளம் வயது பெண்ணுடன் விடுதியில் சந்தோசமாக இருந்ததை குறிப்பிட்டு இளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம் என்றும், இந்த சர்ச்சை பேச்சால் சிவகுமார் மீது புகார் கொடுக்கப்பட்டத்தை குறிப்பிட்டு கைதாகிறாரா சிவகுமார்.? என்றும் மேலும் சிவகுமார் மீது புகார் தெரிவிக்கப்பட்டநிலையில் சென்னை விரைகிறது ஆந்திர போலீஸ் என தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம், இதில் நாம் எந்த ஒரு இடத்திலும் நடிகர் சிவகுமாரை இளம்பெண்ணுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிடவில்லை.

ஆனால் கோடான கோடி மக்கள் நம்பிக்கையான திருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிவகுமார் விவகாரத்தை நாம் செய்தியாக வெளியிட்டதை திசை திருப்பும் வகையில் தினசேவல் நியூஸ் தவறான செய்தியை வெளியிட்டு, சிவகுமார் மீது அவதூறு பரப்புவது You Turn என்கிற இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் கடந்த கால செய்திகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியும், தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், திமுகவும் ஆதரவாகவும் செயல்படுவதை உணரமுடியும்.

இந்த இணையதளத்தை நிர்வகிக்க கூடிய ஆசிரியர் அயன் கார்த்திகேயன் என்பவர் சமூக வலைதளபக்கத்தில் அவரின் கடந்த கால பதிவுகளை பார்த்தால் தெரியும் அவர் திமுகவுக்கு முட்டு கொடுப்பதும் பாஜகவை கேலி செய்வது போன்று பதிவு செய்வதும். இந்நிலையில் சிவகுமார் சர்ச்சைக்குரிய பேச்சு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், திருப்பதியில் இளம்பெண்ணுடன் பணக்காரர் மது அருந்திவிட்டு சந்தோசமாக இருந்தார் என்று பேசியது பொய் என்றால் கோடான கோடி திருப்பதி பக்தர்களிடம் சிவகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அல்லது தினசேவல் நியூஸ் குழுவால் சிவகுமார் பேசிய அந்த சர்ச்சை வீடியோவை தெலுங்கு, ஹிந்தி , ஆங்கிலம் என மொழி பெயர்த்து நாடு முழுவதும் (குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள்)உள்ள கோடான கோடி திருப்பதி பக்தர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, மக்களின் எழுச்சியின் காரணமாக நாடுமுழுவதும் சிவகுமார் மீது பதியப்படும் புகாரின் காரணமாக, திருப்பதியில் இளம் வயது பெண்ணுடன் இருந்த அந்த பணக்காரர் யார் என்பதை விசாரணையின் போது தெரியவர வாய்ப்புகள் இருக்கலாம் என்பதை தெரிவித்து கொண்டு, கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் மேடையில் மைக் கிடைக்கிறது என்பதற்காக கோடான கோடி மக்கள் வழிபடக்கூடிய திருப்பதி கோவில் குறித்து அவதூறு பருப்புவதை நடுநிலையாக செயல்படும் தினசேவல் நியூஸ் அணைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்லும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.