பிரசாந்த் கிஷோர் கொடுத்த ரிப்போர்ட்.. பறிக்கப்படுகிறதா PTR பதவி.? திமுக ஐடி பிரிவு தலமையேற்கும் நபர் இவர் தான்.!

0
Follow on Google News

தேர்தலுக்கு பின்பு திமுக ஐடி பிரிவில் அதிரடி மாற்றம் நடைபெற இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, நடந்து முடிந்த தேர்தல் குறித்து திமுக ஒன்றிய மற்றும் கிளை செயலாளர்கள் செயல்பாடுகள், வேட்பாளர்கள் பிரச்சாரங்கள் என திமுகவினர் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது குறித்து, திமுக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.

அதில் திமுக ஐடி பிரிவை வழிநடத்தக்கூடிய, திமுக ஐடி பிரிவு செயலாளர் PTR பழனிவேல் தியாகராஜன் குறித்து நெகட்டிவ் ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது, அதில் ஐ -பேக் நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்ததில் இருந்தே எங்களுக்கு PTR தியாகராஜன் இடையே மோதல் இருந்து வந்தது இதற்கு முழு காரணம் அவர் தான், நாங்கள் உங்களின் வெற்றிக்கு தான் இங்கே பணியாற்ற வந்துள்ளோம், ஆனால் ஐடி பிரிவில் இருந்து எங்களுக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

PTR தியாகராஜன் தன்னை விட புத்திசாலி யாரும் இல்லை என்று நினைக்க கூடிய ஒருவர் அதனால் தான் அவரால் எங்களுடன் இணைந்து செயல்பட முடியவில்லை, அவரின் அந்த ஈகோ கட்சி வளர்ச்சிக்கு சரி இல்லை என்றும், மேலும் ஐ-பேக் நிறுவன ஊழியர்களின் சமூக வலைத்தள செயல்பாடுகளை தவிர்த்து பார்த்தால், திமுக ஐடி பிரிவின் செயல்பாடுகள் பூஜ்யம் தான் என அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை PTR தியாகராஜன் மீது பிரசாந்த் கிஷோர் ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து ஏற்கனவே முக ஸ்டாலின் மிசா கைது குறித்து எழுந்த சர்ச்சை, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சை போன்டர் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக எழுந்த குற்றசாட்டுகளை சரியாக கையாள முடியாமல் திமுக ஐடி பிரிவு செயல்படாமல் இருந்த போதே, இந்த அமேரிக்கா தம்பி PTR தியாகராஜன் தமிழக அரசியலுக்கு செட் ஆக மாட்டர், அவர் தற்பெருமை பேசுவதற்கு தான் லாயக்கு என திமுக தலைவரிடம் திமுக மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டி வந்ததாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுக்கு பின் PTR தியாகராஜன் வகித்து வரும் திமுக ஐடி பிரிவு தலைவர் பதவி பறிக்கப்பட்டு, திமுக ஐடி பிரிவு இணை செயலாளராக இருக்கும் கார்த்திக் மோகன் அடுத்த திமுக ஐடி பிரிவு தலைமையை ஏற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் MK.மோகன் அவர்களின் மகன் தான் கார்த்திக் மோகன், சமீபத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்த நேரத்தில் கார்த்திக் மோகன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நம்பிக்கைக்குரியவராக வலம் வருகின்றவர் கார்த்திக் மோகன், இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, தமிழக முழுவதும் உள்ள திமுக ஐடி பிரிவில், மாவட்டம் தோறும் சில மாற்றங்களை கொண்டு வந்து, ஐடி பிரிவு இணை செயலாளராக உள்ள கார்த்திக் மோகனை ஐடி பிரிவு செயலராக நியமனம் செய்து திமுக ஐடி பிரிவை தலைமை ஏற்று வழிநடத்த வைக்கும் முடிவில் திமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது.