திமுக ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி இருக்காது, திமுக ஆட்சியில் அவர்கள் கட்சியினர் அடாவடியில் ஈடுபடுவார்கள், நடவடிக்கை எடுக்க வேண்டிய கவல்துறைக்கு அதிகாரம் இருக்காது, என திமுக ஒரு அடாவடி கட்சி அந்த கட்சியினர் ரவுடியிசம் செய்பவர்கள் என 2006 – 2011 திமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து, திமுக மீது மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஊட்டி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்தது அதிமுக.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 10 வருடங்களுக்கு பின் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது திமுக, இதனை தொடர்ந்து நடக்க இருக்கும் திமுக ஆட்சி மக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது, முக ஸ்டாலின் மருமகன் சபரீசன் உறவினரான மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் PTR தியாகராஜன் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே சபரீசன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதில் 2006 – 2011 திமுக ஆட்சியில் நடந்த அடாவடி தான் கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இடம் பெற முடியாமல் போனது, இது போன்ற அரசியலில் எனக்கு விருப்பம் இல்லாதது தான் எனது தந்தை மறைந்த பின்பு நடந்த இடைதேர்தல், 2011 ஆகிய சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை, பின் மெல்ல அரசியல் நிலவரம் மாற தொடங்கியதும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
இந்நிலையில் தற்போது திமுக ஆட்சி அமைக்க இருக்கும் சுழலில், நமது ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும், வளர்ச்சியை நோக்கி தமிழகத்தை எடுத்து செல்ல வேண்டும் , கட்சியினர் அடாவடியில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுத்து, திமுக மக்களுக்கான கட்சி, ரவுடித்தனம் செய்பவர்களுக்கு இங்கே இடமில்லை என்பதை உணர்த்தினால் தான், மக்கள் மத்தியில் திமுகவுக்கு நற்பெயரை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு சபரீசனும் இது டிஜிட்டல் உலகம் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றால் தான் மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பின்பும் நாம் வெற்றி பெற முடியும் என தெரிவித்து இது குறித்து முக ஸ்டாலினிடம் பேசியுள்ளார். இதற்கு ஸ்டாலினும் இது தான் சரியான முடிவு என தெரிவிக்க அணைத்து திமுக மாவட்ட முக்கிய புள்ளிகளுக்கும் திமுக ஆட்சியில் அடாவடிக்கு இடமில்லை என எச்சரிக்கை செய்தி சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில் யார் செயல்பட்டாலும் உடனே நடவடிக்கை எடுக்க திமுக தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் தெரியாமல் திமுக வெற்றி பெற்றதும் பழைய நினைப்பில் சென்னையில் அம்மா உணவகத்தை சேதப்படுத்திய திமுக தொண்டர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தது திமுக தலைமை, இதற்கு பின்பு தான் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர்க்கு தெரிந்துள்ளது, இது பழைய திமுக கிடையாது இனி நம் வாலை சுருட்டி கொள்ள வேண்டும் என்று, இதனை தொடர்ந்து திமுக தலைமையின் இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்த சபரீசன் மற்றும் PTR தியாகராஜன் இருவரையும் திமுக மூத்த தலைவர்கள் பலர் தொடர்பு கொண்டு பாராட்டி வருவது குறிப்பிட தக்கது.