நெல்லையப்பர் கோவிலுக்குள் செருப்பு கால்களுடன் ராகுல்காந்தியா.? மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்.!

0
Follow on Google News

ஏப்ரல் 6ம் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்ததை ஒட்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து. விரைவில் புதுச்சேரிக்கும் பிற இருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அங்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார் ராகுல் காந்தி.

மதுரை, கரூர், என்று இவர் சென்று பிரச்சாரம் செய்த இடங்கள் எல்லாம் நல்ல வரவேற்பைப் கொடுத்தது. கடந்த சில தினங்கள் முன்பு திருநெல்வேலி நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார் ராகுல் காந்தி. திருநெல்வேலி சுரண்டை என்ற கிராமத்தில் பிரச்சாரம் செய்யும்போது நடமாடும் நகை கடை ஹரி நாடார் மூன்று மொழியில் ராகுலுக்கு வைத்த கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நெல்லையில் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்து பிரசாதம் வழங்கப்பட்டது தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. நெல்லையப்பர் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்த புகைப்படம் அல்ல ராகுல் காந்தியுடன் சென்ற, பாதுகாவலர்களும், சில காங்கிரஸ் நிர்வாகிகளும் செருப்புடன் கோவிலுக்குச் சென்றதுதான்.

ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அவசியம் தான் ஆனால் பாதுகாப்பு அளிப்பவர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் கோவிலுக்குள் செருப்புடன் சென்றது தான் தற்போது வைரலாகி வருகிறது. ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளித்து வருபவர்களும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் செருப்புடன் வருவது கூட தெரியாதா? இல்லை அதைப் பார்த்தும் கண்டும் காணாமல் விட்டு விட்டாரா? செருப்புடன் கோவிலுக்குச் செல்ல அறநிலையத் துறை எப்படி அனுமதி அளித்தது எப்படி? புனிதத்தலமான நெல்லையப்பர் கோயிலில் இப்படி செஞ்சுட்டாங்க என்று ராகுல் காந்தி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அறநிலைத்துறை கண்டித்து சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள்.