இரவோடு இரவாக விவசாயிகளுக்கு எதிராக பொதுப்பணி துறை அதிகாரிகள் அட்டூழியம்… கேட்க நாதியில்லையா.? விவசாயிகள் கண்ணீர்.. மதுரையில் நடந்த நெஞ்சை உருக்கும் துயர சம்பவம்..

0
Follow on Google News

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு(நிலையூர்) கிராமத்தில் அமைத்துள்ள பெரிய கண்மாய் சுமார் 1500 ஏக்கர்களுக்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு இது தான் நீர்நிலை ஆதாரம். இந்த கண்மாயின் ஒரு பகுதியில் சட்டத்துக்கு எதிராக நீர்நிலை பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவதும் செவிசாய்க்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மேலும் நீர்நிலையில் புதியதாக கட்டிடம் கட்ட அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில் கண்மாயில் உள்ள நீர்நிலை பகுதியில் புதியதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு பாதிப்பு வராமல் இருக்க வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சுமார் மூன்று நாட்கள் தடுத்து நிறுத்தி. ஒரே இரவில் டிப்பர் லாரியை பயன்படுத்தி புதியதாக கட்டிடம் கட்ட எதுவாக மணல் மெத்தப்பட்டுள்ளதாக குற்றசாட்டுகளை முன் வைத்து கடந்த 30-11-2021 அன்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தின் எதிரொலியாக வைகையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது கூத்தியார்குண்டு (நிலையூர்) கண்மாய் சின்ன கலுங்கு நிரம்பி தண்ணீர் வெளியேறுவதால், மணல் மூட்டைகள் வைத்து தண்ணீர் வெளியேறாமல் விவசாயிகள் தண்ணீரை தேக்கி வைத்திருந்தனர். இது எப்போது அந்த கண்மாயில் விவசாயிகள் கடைபிடித்து வரும் நடைமுறை தான். இவ்வாறு செய்வதால் சுமார் இரண்டு போகம் அந்த பகுதியில் விவசாயம் செய்யலாம்.

ஆனால் நீர்நிலை பகுதியில் சட்டத்துக்கு எதிராக புதியதாக கட்டப்பட்டும் வரும் கட்டிட உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு எதிராகவும் பொதுப்பணித்துறை அதிகாரி மோகன்குமார் AE தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றசாட்டுகளை தெரிவித்துவந்த நிலையில், நேற்று இரவு பொதுப்பணித்துறை அதிகாரி மோகன்குமார் AE, கூத்தியார்குண்டு( நிலையூர்) கண்மாயின் சின்ன கழுங்கில் விவசாயிகள் வைத்திருந்த மணல் மூட்டைகளை அப்புறப்படுத்தி விவசாயிகள் தேக்கி வைத்திருந்த தண்ணீரை வெளியேற்றினர்.

இதனால் சுமார் இரண்டு போகம் விளைய வேண்டிய விவசாய நிலங்கள் ஒரு போகம் விளைவதே சிரமம் என விவசாயிகள் கண்ணீருடன் காட்சியளிப்பது பார்ப்பவர்களுக்கு நெஞ்சை உருக்குவதும் போல் அமைத்துள்ளது. மேலும் தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக, நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அதிகாரி மோகன்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.

விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுவரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அட்டூழியத்தை தட்டி கேட்க நாதியில்லையா.? பஞ்சாப் விவசாயிகள் போராடினால் தான் குரல் கொடுப்பார்களா. தொடர்ந்து 10 நாட்களாக விவசாயத்தை காக்க போராடிவரும் எங்களுக்கு தமிழகம் முழுவது ஆதரவு தரவேண்டும் என கண்ணீர் மல்க கூத்தியார்குண்டு ( நிலையூர்) கிராம விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.