திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் நேற்று பாஜகவில் இணைத்தார், அவரை மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளராக நியமித்தது பாஜக தலைமை, இரண்டு தினங்களுக்கு முன்பு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்த நிலையில், அந்த பட்டியலில் சரவணன் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு திமுக தலைமை மீது தனது அதிருப்தியை தெரிவித்த சரவணன் அடுத்த நாள் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் இது குறித்து நம் விசாரித்ததில், திமுக மீது அதிருப்தியில் இருந்த சரவணன் பாஜகவில் இணைய இருக்கும் தகவல் டெல்லி தலைமைக்கு சென்றுள்ளது, டெல்லி தலைமை தமிழகத்தில் இருக்கும் முக்கிய புள்ளியை அனுப்பி சரவணனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில்,அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கிய மதுரை வடக்கு தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் பாஜகவில் இணைய தயார் என தெரிவித்துள்ளார்.
ஆனால் மதுரை வடக்கு தொகுதியில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றி வரும் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அந்த தொகுதியை வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியாக மாற்றி அமைத்துள்ளார், இந்நிலையில் மதுரை வடக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக டெல்லி பாஜக தலைமைக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் அதிமுகவிடம் இருந்து போராடி அந்த தொகுதியை பெற்றது பாஜக தலைமை.
இந்நிலையில் மதுரை வடக்கு தொகுதியில் பேராசிரியர் தான் வேட்பாளர் என இறுதி செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முந்தைய நாள் டெல்லி பாஜக தலைமை பேராசியரிடம் பேசியதாக கூறப்படுகிறது, அதில் நீங்க தான் வேட்பளார் என இறுதி செய்யப்பட்டுள்ளது, அதற்காக நீங்க கடுமையாக உழைத்து உள்ளீர்கள் என பேசிய டெல்லி பாஜக தலைமை திமுகவில் இருந்து பாஜகவில் இணைய இருக்கும் எம்.எல்.ஏ சரவணன் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்பது குறித்தும் பேசியுள்ளது.
இதற்கு, நான் எனது வெற்றிக்கு பாடுபடவில்லை, கட்சியின் வெற்றிக்கு தான் பாடுபட்டேன்,இதில் நமது கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உண்டு என தெரிவித்த பேராசிரியர், நான் வெற்றி பெறுவது முக்கியமில்லை பாஜக வெற்றி பெற வேண்டும், மேலும் ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ நமது கட்சிக்கு வந்தால் அது நமக்கு தானே பலம் என தெரிவித்தவர், தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அது சரியாக தான் இருக்கும் என தெரிவித்தவர் தனக்கு வழங்கப்பட்ட சட்டமன்ற தொகுதி வேட்பாளரையும் விட்டு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து முக்கிய தமிழக அரசியல் விமர்சகர் ஒருவர் கூறுகையில், என்னய்யா மனிதர் இவர், தமிழகத்தில் இது போன்ற அரசியல் தலைவர்களும் இருக்க தான் செய்கின்றார்கள், தனக்கு எம்.எல்.ஏ, மற்றும் எம்.பி சீட் வேண்டும் என திராவிட கட்சி தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் நபர்கள் இருக்கும் இந்த தமிழகத்தில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை கட்சி வளர்ச்சிக்காக விட்டு கொடுத்துள்ள பேராசிரியர் போன்றவர்களை பாராட்டி தான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.