கடந்த செப்டம்பர் மாதம் மகாகவி பாரதியாரின் 100வது நினைவு நாளில், பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கும், தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் , சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை நிறுவப்படும்,
உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. என பிரதமர் தெரிவித்தார். ந்நிலையில் சமீபத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை நேரில் சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் காசியில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைகள் பற்றி சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். இது குறித்து பேராசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் ஒரு கோரிக்கை முன் வைத்திருக்கிறேன் .. காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுப்பிரமணிய பாரதியாரின் பெயரில் அவரது நினைவு நூற்றாண்டு ஒட்டி பல்கலைக்கழக இருக்கை ஒன்றை அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு வெளியிலும் தமிழின் பெருமையை உலகெல்லாம் பறைசாற்றும் பிரதமராக ஐயா மோடி அவர்கள் விளங்குகிறார்.
தனது சொந்த தொகுதியில் காசியில் தமிழுக்காக ஓர் இருக்கை அமைத்து இருக்கிறார். எனவே இதில் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும் எப்படி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்த போது ஒட்டுமொத்த தமிழகமும் பெருமைப் பட்டதோ அதைப்போல காசி பல்கலைக்கழகத்துடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
உத்தரபிரதேசத்தில் ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் தமிழுக்கு ஓர் இருக்கை அமையும்போது தமிழ்நாடு அதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். இந்த முயற்சியில் தமிழ் பல்கலை கழகம் ஈடுபட வேண்டும் என்று சொன்னேன். இந்தக் கோரிக்கையை பற்றி பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்திருக்கிறார் ஏன பேராசிரியர் தெரிவித்துள்ளார்.