நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தவுடன் தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிகள், திமுகவுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்த வலைதளவாசிகள் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து திமுகவுக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்த சமூக வலைத்தள பிரபலம் கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாஜக ஐடி பிரிவு நிர்வாகி சரவணன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார், தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன் ஜி கைது செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதே வழக்கில் மதுரை சேர்ந்த பாஜக நிர்வாகி கே கே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின் நீதிமன்றத்தில் சரண்டராகி பெயில் கிடைத்துள்ளது, இதே போன்று தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் மற்றும் எதிர்கட்சிகள் மீது வழக்கு பதியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பாஜக வட்டாரத்தில், திமுக அரசின் இந்த செயல் எதிர்கட்சிகள் மீது நடக்கும் அடக்குமுறை என்றும், கருத்துக்களை பதிவு செய்வதர்க்காக திமுக அரசு வழக்கு பதிவு செய்து மிரட்டல் போக்கை கடை பிடித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி குறித்து ஆபாசமாக பேசியும், ஒருமையில் சர்ச்சை கூறிய வகையில் பலர் பேசிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன, மேலும் சமூக வலைதளத்தில் பிரதமருக்கு எதிராக ஆபாசமாகவுமு ஒருமையில் பதிவுகள் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் ஒலிக்க தொடங்கியது.
இதனை தொடர்ந்து தென் மாவட்டத்தை சேர்ந்த பாஜக முக்கிய தலைவர் ஒருவர், சமீபத்தில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்கள், அதில் இது தொடர்பாக ஒரு அமைப்பை ஒன்றை உருவாக்குவது, அதற்கான வழக்கறிஞர் குழுவும் சமூக வலைத்தள குழுவும் அமைக்கப்பட்டு பிரதமர் மோடியை ஆபாசமாக, ஒருமையில் பதிவு செய்பவர்கள், மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வழக்கறிஞர்கள் குழு, மற்றும் சமூக வலைதள குழு ஓன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளது, விரைவில் இதன் தொடக்க நிகழ்ச்சி சில நாட்களில் நடக்க இருப்பதாக கூறபடுகிறது. இந்நிலையில் இந்த அமைப்பு தொடங்கியதும் , புகார் தெரிவிக்க சமூக வலைத்தள பக்கம் மற்றும் வாட்ஸ் ஆஃப் என் வெளியிடபடும், அந்த என்னை தொடர்பு கொண்டு பிரதமர் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவிப்பவர்கள் பற்றி புகார் தெரிவிக்கலாம்.
இந்த தழுவல் வழங்கறிஞர் குழு மூலம் போலீசில் புகார் தெரிவிக்கப்படும், அதே போன்று டெல்லி தலைமை கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறது. மேலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள சமூக வலைத்தள குழுவினர் இதற்கு முன்பு பிரதமர் குறித்து ஆபாசமாக, ஒருமையில் மாற்று தவறான தகவலை பேசிய வீடியோக்கள் மற்றும் பதிவுகளை சேகரிக்க தொடங்கியுள்ளனர் விரைவில் அதிகாரப்பூர்வமாக இதற்க்கான அமைப்பு தொடங்கியதும் வழக்கறிஞர் குழு நடவடிக்கையில் இறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.