வழக்கம் போல் பேசுவது போன்று சட்டசபையில் பேசி மன்னிப்பு கேட்ட பழனிவேல் தியாகராஜன்..! சபை நாகரிகம் தெரியாதா.?

0
Follow on Google News

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பொது தளத்தில் எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் சமூகத்தில் போற்ற தக்க கூடிய முக்கிய நபர்களை அநாகரிகமாக பேசி வர கூடியவர். ஈஷா யோக மைய்யத்தின் நிறுவனர் ஜாக்கி வாசுதேவ் அவர்களை அவன் என்ன கிழித்தான் என்று ஒருமையில் பேசியது, மேலும் பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமனை, அவன் ஒரு கிறுக்கு பய என்று அநாகரிகமாக பழனிவேல் தியாகராஜன் பேசி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

மேலும் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களை பார்த்து, எப்போது என்று தேதி குறிப்பிட்டு சொன்னார்களா.? என பத்திரிகையாளர் கேள்விக்கு எரிச்சலுடன் பதிலளிப்பது.மேலும் ஏன் அவருக்கு அறிவு பத்தவில்லை என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா.? உங்களுக்கு கணக்கு தெரியுமா.? தெரியாத .? என கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் உடனே கோபப்பட்டு எரிச்சலுடனே பதில் அளிக்க கூடியவர் பழனிவேல் தியாகராஜன்.

இந்நிலையில் தொடர்ந்து பொது வெளியில் அடக்கம் இல்லாமல் வரம்பு மீறி பேசி வந்த பழனிவேல் தியாகராஜன் , சட்டசபையில் சபை நாகரீகத்தை மீறி பேசியதாக கூறபடுகிறது. அதிமுக எம்.எல்.ஏ., சம்பத்
குமார், வெள்ளை அறிக்கை குறித்து பேசிய போது கோபம் அடைந்த நிதி அமைச்சர் தியாகராஜன் பதிலடி தரும் விதத்தில் அவர் பேசியது பெரும் சர்ச்சையானது இதனை தொடர்ந்து அமைச்சரின் எந்த பேச்சுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சேபம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ சம்பத், நிதி அமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனை தொடர்ந்து தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு, நிதி அமைச்சர் பேசியதாவது: விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதே நோக்கம். நான் பேசியது, எம்.எல்.ஏ., வின் மனதை பாதித்து இருந்தால்,அதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

பல நபர்கள், இரவு, பகலாக பணி யாற்றி, குறுகிய காலத்தில், இவ்வளவு தகவல் திரட்டி, வெள்ளை அறிக்கை
தயாரித்தனர். ‘இது முன்னுதாரண அறிக்கை’ என, மத்திய அரசிடம் இருந்து தகவல் வந்துள்ளது. வெள்ளை அறிக்கையில் ஒன்றும் இல்லை கூறியது, எனக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. யாரையும் மரியாதை குறைவாக பேச எனக்கு விருப்பமில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்தார்.