வாய் மட்டும் பெரிதாக பீற்றிக் கொள்கிறார் பழனிசாமி.!அதிமுகவினருக்கே அந்த வருத்தம் இருக்கிறது.! முக ஸ்டாலின் விளாசல்.!

0
Follow on Google News

எந்த சலுகையும் உதவியும் மத்திய பாஜக அரசில் இருந்து பெற முடியாத உதவாக்கரை பழனிசாமிக்கு திமுகவையும் காங்கிரஸ் அரசையும் குறைசொல்வதற்கான எந்த அருகதையும் இல்லை.என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார், மேலும் அவர் பேசுகையில், வாய் மட்டும் பெரிதாக பீற்றிக் கொள்கிறார் பழனிசாமி. தினந்தோறும் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரால் பழனிசாமி பேசி வரும் பேச்சுகள் சகிக்கவில்லை.

குறிப்பாக, தான் என்ன சாதனை செய்தேன் என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். எதை எடுத்தாலும் தமிழ்நாடு முதலிடம் என்கிறார். தொழிலில் முதலிடம், கல்வியில் முதலிடம், நிதியில் முதலிடம் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அப்படி யார் சொன்னது என்பதை அவர் சொல்வது இல்லை! அடுத்து, அந்த விருது வாங்கினேன், இந்த விருது வாங்கினேன் என்று சொல்லிக் கொள்கிறார். யார் விருது கொடுத்தது என்பது தெரியவில்லை.

இவருக்கெல்லாம் விருது கொடுக்கிறார்கள் என்றால் அந்த விருது கொடுப்பவர்களின் தகுதி என்ன? யார் யாரோ விருது கொடுப்பது இருக்கட்டும்? தமிழ்நாட்டு மக்கள் அவரை மதிக்கிறார்களா? அந்த தகுதி அவருக்கு இருக்கிறதா? தகுதி இல்லாத ஒருவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகிவிட்டார் என்ற வருத்தம் தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிறது. இன்னும் சொன்னால் அதிமுகவினருக்கே அந்த வருத்தம் இருக்கிறது. சொந்தக் கட்சிக்காரர்களால் மதிக்கப்படாத முதலமைச்சர் தான் பழனிசாமி.

தோல்வி பயம் பழனிசாமிக்கு வந்துவிட்டது. கடந்த 9 ஆம் தேதி கந்தனேரியில் பேசிய பழனிசாமி, “ஆட்சியைப் பிடிக்க வேண்டிய எண்ணம் எனக்கு இல்லை” என்று பேசி இருக்கிறார். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதைப் போல இருக்கிறது. ஆட்சி அவர் கையில் இருந்து நழுவப் போகிறது. அதனால் தான் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய எண்ணம் எனக்கு இல்லை என்கிறார் பழனிசாமி. சுருட்ட வேண்டியது அனைத்தையும் சுருட்டி முடித்துவிட்டார்கள்.

அதனால் தான் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் இல்லை என்கிறார். அடிக்க வேண்டிய கொள்ளையை அடித்து முடித்துவிட்டார். அதனால் தான் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் இல்லை என்கிறார். ஆட்சியை பிடிக்கும் எண்ணம் இருந்தாலும், அவருக்கு ஆட்சி கிடைக்கப் போவது இல்லை. ஆட்சி நம் கைக்குத் தான் வரப்போகிறது. அதனைத் தான் தமிழ்நாடு முழுவதும் நான் பார்க்கும் எழுச்சி சொல்கிறது. உங்களது எழுச்சியும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது. இந்த எழுச்சி தமிழ்நாட்டின் மலர்ச்சிக்கு வித்திடட்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.