சென்னையில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான மழை பெய்ததால் இதில் சென்னை மாநகரத்தில் ஏரிகள் நிரம்பி வெளியேற வழியில்லாமல் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கியது.
இதேபோன்ற தமிழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் வெளியேற முடியாமல் சென்னை வெள்ளப்பெருக்கில் தத்தளித்தது. தற்போது அந்த வெள்ளப்பெருக்கு மிஞ்சும் அளவு சென்னை நகரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சென்னை மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இந்தத் துயரத்தில் வாடியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் தமிழக அரசு மக்களுக்கு வழங்கி வரும் உதவிகள் குறித்து பொதுமக்களிடம் விசாரித்தார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை கேட்டறிந்து உடனே பூர்த்தி செய்யுமாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளார். இவருடன் மாஜி அமைச்சர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.