புதுச்சேரியில் கழிவு நீர் வாய்க்காலில் விழுந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சை அளித்து குடும்பத்தினரிடம் சேர்த்த காவலர்களின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. புதுச்சேரி உழவர்கரை மேரி வீதியைச் சேர்ந்த மூதாட்டி சுந்தரி (80). இவர் கன மழை பெய்த போது எதிர்பாராத விதமாக கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக உடனடியாக அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த சரவணகுமார் மற்றும் ஜெய பிரகாஷ் இரு காவலர்களும் 50 வயதுடைய அந்த மூதாட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிறகு மீட்கப்பட்ட அந்த மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு அந்த மூதாட்டியை இரு காவலர்களும் அவர்கள் குடும்பத்துடன் வந்து ஒப்படைத்தனர்.
அதை இரு காவலர்களும் மூதாட்டியை வீட்டிற்கு வந்து குடும்பத்தினர் ஒப்படைக்கும் அந்த வீடியோவை சிலர் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொண்ட இரு காவலர்களுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.