தோல்வி பயத்தில் தான் தி.மு.க. அவதூறு பிச்சாரம் செய்கிறது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- கடந்த பத்து வருடங்களாக தமிழகத்தில் ரவுடியிசம் முழுமையும் இல்லாமல் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் ரவுடிசம் தலைவிரித்தாடியது. யாரும் எந்தவித தொழிலும் செய்ய முடியாமல் இருந்து வந்தது. அவர்கள் ஆட்சி காலத்தில் திமுக அவ்வளவு ரவுடி ராஜியத்தை செய்து வந்தது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மதுரை மாநகர் வளர்ச்சிக்காக ரூ.250 கோடி நிதி வழங்கினார். ஆனால் திமுக ஆட்சி காலத்தில் மதுரையை சீரழிக்க 250 கேடிகளை திமுகவினர் வைத்திருந்தனர்
வைரஸ் தொற்று என்பது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தற்சமயம் பிரிட்டனில் ஆரம்பித்துள்ளது. சுகாதாரத் துறையின் முதன்மை செயலாளர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் தற்சமயம் எந்தவித பெரிய பாதிப்பும் இல்லை. பயப்பட வேண்டாம் எனவும் சொல்லி உள்ளார்கள்.வைரஸ் தொற்று இருக்கக்கூடிய காரணத்தினாலே 80 வயது உள்ளவர்கள் தபால் முறையில் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது.
ஆனால் தற்சமயம் திமுக நீதிமன்றத்திற்கு சென்று உள்ளது. இதில் தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும் இதில் நான் கருத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சட்டமன்ற தேர்தலுக்கும் இது ஒத்து வருகிற பொழுது தற்சமயம் இவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார்கள் என்றால், அவர்கள்ளை தோல்வியை ஒத்துக் கொள்கிறார்கள். வயதானவர்களின் ஓட்டு திமுகவிற்கு விழாது என்று அவர்கள் நம்பியுள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பொழுது அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் என்று சொன்னார் ஸ்டாலின் ஆனால் அது நடைபெற்றதா?
வாக்குறுதிகள் கொடுப்பது திமுகவிற்கு எளிது. இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்று சொன்னார்கள். தந்தார்களா? திமுக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற மாட்டார்கள். அம்மாவின் அரசு கொடுத்த வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றி வருகிறது. இன்றைக்கு தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் பல்வேறு அவதூறு பிரச்சாரத்தை பரப்புகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.