அமைச்சரை எதிர்த்து வெற்றி பெற போவதில்லை.! தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவோமோ.?வேண்டமா.?குழப்பத்தில் திமுக எம்.எல்.ஏ வேட்பாளர்.!

0
Follow on Google News

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அணைத்து கட்சிகளும் வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர், ஆனால் திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமர் எதிராக திமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் இதுவரை பிரச்சாரத்தை தொடங்கமால் குழப்பத்தில் இருந்து வருகிறார்.

மதுரை திருமங்கலம் தொகுதியில் மீண்டும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமர் போட்டியிடுவார் என்பது முன் கூட்டியே தெரிந்த ஓன்று, இதனை தொடர்ந்து கடந்த ஐந்து வருடங்களில் திருமங்கலம் தொகுதி பல்வேறு நல திட்டப்பணிகளை செய்து வருகின்றவர் ஆர்.பி.உதயகுமார், பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி என்பதால் அந்த கிராம மக்களுடன் சகஜமாக பழகுவது, கொரோனா காலகட்டத்தில் அணைத்து கிராமங்களிலும் நிவாரணம் வழங்குவது, திருமங்கலம் அரசு மருத்துவமனையை தனியார் மருத்துவமனைக்கு நிகராக மாற்றியது என திருமங்கலம் தொகுதி மக்களின் நம்பிக்கைக்குரிய சக்தியாக இருந்து வருகிறார் ஆர்.பி.உதயகுமார்.

திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என முன்கூட்டியே அறிந்த மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார், மேலும் திருமங்கலம் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளி விட வேண்டும் என மதுரையில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஒருமித்த கருத்துடன் இருந்து வந்தனர், ஆனால் திருமங்கலம் தொகுதியை திமுக கூட்டணியில் இருக்கும் எந்த ஒரு கூட்டணி கட்சிகளும் ஏற்று கொள்ளவில்லை.

இந்நிலையில் திமுக தலைமை அந்த தொகுதியை திமுக மாவட்ட செயலாளர் மணிமாறனுக்கு ஒதுக்கியது. இதனை தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் மூன்றாவது சுற்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொகுதி முழுவதும் உற்சாகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், ஆனால் இன்னும் தேர்தல் பணியில் கூட ஆர்வம் காட்டாமல் பெரும் குழப்பத்தில் இருந்து வருகிறார் திமுக வேட்பாளர் மணிமாறன்,இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்ததில்.

அவர்கள் நம்மிடம் கூறியதாவது, திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெற்றி பெறுவது உறுதி, இந்நிலையில் தீவிரமாக களத்தில் இறங்கி அதிக பணத்தை செலவு செய்து பணத்தை இழந்து தோல்வி அடைவதை மணிமாறன் விரும்பவில்லை. நமக்கு விழும் ஓட்டுகள் உறுதியாக விழும் ஆகையால் சுருக்கமாக செலவு செய்து பிரச்சாரத்தை தொடங்கும் முடிவில் மணிமாறன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.