பத்து வருடமா வருமானம் இல்லை.! வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை சுருட்டும் திமுக ஒன்றிய, வட்ட செயலாளர்கள்.!

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது, பிரச்சாரத்தின் போது பல சர்ச்சைக்குரிய சம்பவங்களும் நிறைவேறி வருகிறது, அதில் திமுக எம்பி ஆ.ராசா முதல்வர் பழனிசாமி அவர்களின் தயார் குறித்து இழிவாக பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து இறுதியில் ஆ.ராசா மன்னிப்பு கேட்கும் நிலைக்கு கொண்டு சென்றது, அதே போன்று உதயநிதி எய்ம்ஸ் மருத்துவமனையை இன்னும் கட்டப்படாத நிலையில் ஒரு செங்கலை தூக்கி கொண்டு பிரச்சாரம் செய்து வருவது சுவாரசியமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்தது யார் ஆட்சி அமைப்பது என்பதில் கடும் இழுபறி நீடித்து வரும் நிலையில் தேர்தல் தேதி நெருங்கும் இறுதி கட்டத்தில் வாக்குக்கு பணம் கொடுக்க தமிழக்தில் உள்ள பல வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர், அரசியல் காட்சிகள் தெரு தெருவாக, பிரச்சாரம் செய்தாலும் இறுதியில் வாக்குக்கு பணம் கொடுத்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்துக்கு வேட்பாளர்கள் தள்ளப்படும் சுழல் தமிழக தேர்தல் களம் மாறியுள்ளது.

பல இடங்களில் வாக்காளர்கள் இன்னும் பணம் வரவில்லை, எப்ப தருவிங்க, ஒரு ஓட்டுக்கு எவ்வளவு என வெளிப்படையாகவே அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகளிடம் கேட்க தொடங்கியுள்ளனர், இந்நிலையில் வேட்பாளர் பட்டியலில் அறிவித்த உடனே, ஒரு ஓட்டுக்கு எவ்வளவு என கணக்கிட்டு அந்தந்த பகுதி ஒன்றிய செயலாளர்கள், வட்ட செயலாளர்களிடம் பணத்தை ஒப்படைத்துள்ளது அரசியல் கட்சிகள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தாலும், தேர்தலுக்கு இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு முன்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தான் நியாபகத்தில் வைத்து நமக்கு வாக்கு அளிப்பார்கள் என பணத்தை இன்னும் பட்டுவாடா செய்யாமல் இருக்கின்றனர், பல்வேறு இடங்களில் ஓட்டுக்கு ரூபாய் 500 முதல் 1000 வரை கொடுக்கப்படுகிறது, சில நச்சத்திர வேட்பளர்கள் தொகுதியில் ரூபாய் 2000 ஆயிரம் வரை கொடுக்க தயார் நிலையில் வேட்பாளர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் திமுக ஒன்றிய செயலாளர்கள், மற்றும் வட்ட செயலாளர்கள் பலர் கடந்த 10 வருடமாக திமுக ஆட்சியில் இல்லாததால் வருமானம் இன்றி தவிப்பதால் வாக்காளர்களுக்கு கொடுக்க கொடுத்த பணத்தை பெரும்பாலும் அதை வாக்காளர்களுக்கு கொடுக்காமல் சுருட்டுவதாக வேட்பாளர்களுக்கு தகவல் சென்றுள்ளது, இதனால் கடும் அப்செட்டில் உள்ள வேட்பாளர்கள் இந்த மாதிரி ஆட்களை வைத்து எப்படி வெற்றி பெறுவதும் என சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.