ஓடிடி தளத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்… ஆபாச காட்சிகளுக்கு இனி முற்றுப்புள்ளி…சுப்ரீம் கோர்ட் அதிரடி.!

0
Follow on Google News

ஆபாச படம் காட்டும் ஓடிடி தளங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி ஆப்பு வைத்துள்ளது, சமீபகாலமாகவே ஓடிடிக்கு நல்ல வரவேற்பு உண்டாகி வருகிறது. சில ஓடிடி தளங்களில் சில குறிப்பிட்ட மாதங்களை புண்படுத்தும் காட்சிகளை வெளியிட்ட அந்த மதத்தை சேர்ந்தவர்கள் மனதை புண்படும்படி நடந்து கொண்டது,

ஒரு சில தளங்கள் சில காட்சிகள் மட்டுமே வெப் சீரிஸில் ஆபாசமாக உள்ளது. ஆனால் சில தளங்கள் வெப் சீரியஸ் முழுவதும் ஆபாச காட்சிகள் தான். ஓடிடி தளம் எல்லை தாண்டி சென்ற பிரபலமான ஒரு தளம் தாண்டவ் என்ற வெப் சீரியஸில் சில வருந்ததக்க காட்சிகள் இடம் பெற்றதால் அந்த வெப் சீரியஸ் மீது வழக்கு தொடரப்பட்டது.

நேற்று உச்சநீதிமன்றத்தில் தாண்டவ் வெப் சீரியஸ் வழக்கு விசாரணைக்கு வந்தது. சமீபகாலமாகவே ஓடிடி தளத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெறுவதை நாங்கள் கவனித்து வருகிறோம். மத்திய அரசு ஓடிடி தளங்களை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். எனவே இதன் மூலம் சில ஓடிடி தளத்திற்கு சில கட்டுப்பாடுகள் வரும். ஆபாச காட்சிகளுக்கு இனி ஓடிடி தளத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.