நியுசிலாந்தில் முழுவதுமாக சிகரெட் குடிக்கும் பழக்கத்தை ஒழுக்க புதிய சட்டம்!

0
Follow on Google News

நியுசிலாந்து அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் அந்த நாட்டில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க உள்ளது. உலகின் மிகவும் சிறிய நாடுகளில் ஒன்றான நியுசிலாந்து பல விஷயங்களில் உலகநாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது. கொரோனா தொற்றை திறம்பட சமாளித்த நாடுகளில் நியுசிலாந்துக்கு முக்கிய இடம் உண்டு.

இந்நிலையில் இப்போது நாட்டில் இளையவர்கள் சிகரெட் பிடிப்பதை முழுவதும் நிறுத்தும் வகையில் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் 14 மற்றும் அதற்கு குறைவான வயது உள்ளவர்கள் சிகரெட் வாங்குவதை தடை செய்கிறது. அதன் பின்னர் ஆண்டுதோறும் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை அதிகமாக்கிக் கொண்டே செல்ல உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னரே அவர்கள் சிகரெட் வாங்க முடியும்.

அதற்குள் அவர்களுக்குள் சிகரெட் புகைக்கும் பழக்கமே இருக்காது. ஆனால் 60 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு 80 வயது ஆனபினர் சிகரெட் வாங்கிக் கொள்ளலாம். அது தங்கள் வயதுக்கான அடையாள அட்டையைக் காட்டி. இந்த சட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.