திடீரென்று கட்டணத்தைக் குறைந்த நெட்பிளிக்ஸ்… புது பிளான்கள்!

0
Follow on Google News

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான புது ப்ளான்கள் மற்றும் கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் ஓடிடியாக அதிக வாடிக்கையாளர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது அமேசான் ப்ரைம் வீடியோ. உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நெட்பிளிக்ஸால் கூட இந்தியாவில் அமேசானை ஓரம் கட்ட முடியவில்லை.

அதற்குக் காரணம் நெட்பிளிக்ஸின் சந்தாவை விட அமேசானின் சந்தா மிகவும் குறைவாக இருந்ததுதான். ஆனால் சமீபத்தில் அமேசான் ப்ரைம் தங்களது கட்டணத்தை 50 சதவீதம் அதிகமாக்கியது. இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் ஏற்கனவே தாங்கள் வசுலித்து வந்த கட்டணத்தை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

இதுவரை 199 ரூபாயாக இருந்த மொபைல் பேக் 149 ரூபாயாகவும், 499 ரூபாய் வசூலிக்கப்பட்ட பேசிக் ப்ளான் 199 ஆக குறைக்கப்பட்டுள்ளது.649 ரூபாயாக இருந்த திட்ட, 499 ரூபாயாகவும், 799 ரூபாயாக இருந்த திட்டம் 649 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.