மாநில அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட இந்து கோவில்கள் விஷயங்களின் அமைச்சர் தலையீடு.! இது மக்களை திசை திருப்பும் முயற்சியே..!

0
Follow on Google News

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சில பரபரப்பு தகவல்களை சமீபத்தில் வெளியிட்டார், அதில் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டப்படி அடுத்த நூறு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும், தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பதாகை வைக்கப்படும்.இனிவரும் காலங்களில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை அரசு உறுதி செய்யும்.

மேலும் தமிழகத்தில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பற்றாக்குறை உள்ள இடங்களில் பெண்கள் நியக்கமிக்கப்படுவர் என்றும் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைப்படியே ஜீயர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவர் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹச் ராஜா தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், இந்து கோவில்களில் சட்டத்திற்கு புறம்பான மாநில அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் தொடர்ந்து பேசி வருவது கவலையளிக்கிறது. அரசியல் சட்டம் தெளிவாக இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவு 25 அரசு வழிபாட்டுத் தலங்கள் குறித்து பொருளாதார மற்றும் மதம் சாராத (secular activity) விஷயங்கள் குறித்தே சட்டம் இயற்ற முடியும் எனவே மதம் தொடர்பான பூஜை மற்றும் வழிபாட்டு விஷயங்களில் அரசு தலையிட முடியாது.

மேலும் தமிழக அறநிலையத்துறை வசம் உள்ள 44000 கோவில்களில் அனைத்து சமுதாயத்தினரும் அர்சகர்களாக உள்ளனர். கிட்டத்தட்ட 80 சதவிகித கோவில்களில் பட்டியல் சமுதாய சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் அர்சகர்களாக உள்ளனர். உண்மைநிலை அவ்வாறு உள்ளபோது ஏதோ திமுக அரசு தான் அனைத்து சமுதாயத்தினரையும் அர்சகர்களாக ஆக்கப்போவது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் அறநிலையத்துறை அமைச்சர் ஈடுபட்டுவருவதற்கு காரணம் என்ன. சமீபத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ள 75 உத்தரவுகளை செயல்படுத்தாமல் மக்களை திசை திருப்பும் முயற்சியே என தெரிவித்துள்ளார்.