மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தில் அழகான நகர்வுகளை செய்து கட்டம் கட்டிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், வேளாண் சட்டத்தை இந்தியா முழுவதும் அணைத்து மாநிலங்களும் ஏற்று கொண்டாலும் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், அவர்களுக்கு தலைநகர் டெல்லி அருகில் இருப்பதால் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை தீவிரமாக நடத்தி வந்தனர்.
போராட்டக்காரர்களிடம் மத்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் விவசாயிகள் போர்வையில் காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதை அறிந்த மத்தியஅரசு நிதானம் காத்தது, பேச்சுவார்த்தையின் போது போராட்டக்காரர்கள், ரகசிய பேச்சுவார்த்தைகளில் காலிஸ்தான் தோன்ற எது காரணமோ அதை பற்றியும் பேசியிருக்கின்றார்கள், இதற்கு முன்பு சீக்கிய மத அங்கீகாரம் உள்ளிட்ட பல சிக்கல்களாலேதான் சீக்கிய சமூகம் இந்தியாவோடு முரண்பட்டு காலிஸ்தான் பிரிவினைவாதமெல்லாம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு தொடர்ந்து டெல்லி போராட்டக்காரர்களிடம் பேசியபொழுதும், சில அடிப்படைவாத சீக்கிய கும்பல் வழிக்கு வரவில்லை, அப்பொழுதுதான் இவர்கள் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்பதை உறுதி செய்த மத்திய அரசு, இனி விவசாயிகள் வேறு காலிஸ்தான் பயகரவாதிகள் வேறு என பிரிக்க முடிவு செய்தது மத்திய அரசு.போராட்டகாரர்களின் டிராக்டர் ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்து கைகட்டி நின்றது மத்திய அரசு.
விஷயம் அறியாத விவசாயிகள் என பெயர் கொண்ட காலிஸ்தான் பயங்கரவாத கூட்டம் அனுமதியில்லாத செங்கோட்டை வாசலுக்கு சென்று புனிதமான தேசியகொடியினை எறிந்து காலிஸ்தான் கொடியினை ஏற்றியது. காலிஸ்தான் பயங்கரவாத கும்பலின் உண்மை முகம் தெரியவேண்டும் என்பதற்காக மத்திய அரசும் இதை தான் எதிர்பார்த்தது. மற்றபடி அரசு நினைத்திருந்தால் ஒரே நாளில் இவர்களை நசுக்கி இருக்கலாம்.
ஆனால் இந்த போராட்டத்தை யாரெல்லாம் ஆதரித்தார்களோ அவர்கள் வாயாலே அவர்களை பின்வாங்க வைக்கும் தந்திரத்தை அரங்கேற்றிவிட்டது மத்தியஅரசு, தற்போது டிராக்டர் ஏறி போராட்டத்தை தொடங்கி வைத்த ராகுல் காந்தி வன்முறைக்கு காங்கிரஸ் எதிரி என அலறுகின்றார், பஞ்சாபிய விவசாய சங்கங்களே எங்கள் போராட்டம் சமூக மற்றும் தேசிய விரோதிகளால் திசைமாறிவிட்டது என தெரிவித்துள்ளனர், நீங்களெல்லாம் போராட்டம் நடத்தியது போதும், அவசரமாக பஞ்சாப் திரும்பவும் என பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்,டெல்லியில் 144 தடை என அறிவிக்கபட்டு துணை ராணுவம் களமிறக்கபட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறது மத்திய அரசு.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .